இரு இசைத்தொகுதிகள்
இந்த நாட்களை இனிதாக்கிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான இசைத்தொகுதிகளைச் சொல்லவேண்டும். முதலாவது திரு ராஜன் சோமசுந்தரம் அவர்களின் "சந்தம்: செந்தமிழைச் சந்திக்கும் சிம்பொனி" இசைத்தொகுதி (Sandham: Symphony Meets Classical Tamil). சங்க இலக்கியத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடல்கள் சிம்பொனி இசையில் வழங்கப்பட்டிருக்கின்றன. பாம்பே ஜெயஸ்ரீ பாடிய "வேரல் வேலி" (குறுந்தொகை 18), பிரியங்கா பாடிய "முல்லை ஊர்ந்த" (குறுந்தொகை 275), ராஜலட்சுமி பாடிய "ஞாயிறு காயாது" (குறுந்தொகை 378), சைந்தவி பாடிய "கலம்செய் கோவே" (புறம் 256), கார்த்திக் - பிரகதி பாடிய யாயும் ஞாயும் (குறுந்தொகை 40), கார்த்திக் பாடிய "யாதும் ஊரே" (புறம் 192) என்று ஆறு பாடல்கள். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனும் அ.முத்துலிங்கமும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரிகள், இன்றும் இயல்பான மானுட உணர்வுகளை நமக்குக் கடத்தும் போது ஏற்படும் சிலிர்ப்பு ஒருபக்கம். உலகின் வேறு எத்தனை இனத்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கு...