Posts

Showing posts from July, 2018

ஆர்கலியில் ஓர் துளி!

Image
பல்கலைக்கழக வாழ்க்கையின் இறுதி நாட்களில், சொல்லிவைத்தாற்போல, பெரும்பாலான சிங்கள நண்பர்கள் சொன்ன வசனம் இது. “தமிழர் இவ்வளவு நல்லவர்கள் என்று உன்னோடு பழகும் வரை தெரியாது.” இந்த வசனத்தை சிங்களவரோடு பழகக்கிடைத்த எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்போம். மனந்திறந்து பழகும்போது “அவர்கள் எல்லோருமே அப்படித்தான்” என்ற பொதுமைப்படுத்தல் சிந்தனை தவறென்பதை உணரும் கணத்தில், பொறுக்கமுடியாமல் அவர்களிடம் நாமோ, நம்மிடம் அவர்களோ இவ்வசனத்தைச் சொல்வதுண்டு. முகநூல் பதிவுகளிலும், நட்பார்ந்த அரட்டைகளிலும், தனிநபர் நடத்தையிலும் மேற்சொன்ன ஒவ்வொரு நண்பர்களும், இனப்பிரச்சினை சார்பான தம் நிலைப்பாட்டை மறைமுகமாகவேனும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஒரு தனி ஒருவனின் பழக்கம், ஒரு இனக்குழுமம் சார்ந்த அவர்களது பொதுக்கருத்தை மாற்றியதை (குறைந்தபட்சம் மாற்ற முயன்றதை) தம் வாயாலேயே அவர்கள் ஒப்புக்கொண்டபோது ஒன்றை உணர்ந்தேன். என்னையறியாமலேயே அவர்களுடன் - புன்னகைத்த - பேசிய – உணவு உண்ட - ஒவ்வொரு கணத்திலும், இந்தச் சிறுதீவுக்குள் சுமார் நான்கு மில்லியன் குடித்தொகை கொண்ட ஒரு இனத்தின் ஒட்டுமொத்த பிரதிநித...

கொழும்பு - தெரிந்த பெயர்கள், தெரியாத கதைகள்!

Image
இலங்கைத்திருநாட்டின் தலைநகரான கொழும்பு, ஈழத்தில் மாத்திரமன்றி, தென்னாசியாவிலேயே பல்லாண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்திருந்த துறைமுகப் பெருநகர்! அதன் சில இடப்பெயர்களே அதன் வரலாற்றைத் தன்னுள் உட்பொதித்திருப்பதைக் காணலாம். இங்கே அத்தகைய சில இடப்பெயர்களின் பின்னே மறைந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் தேடுவோம், வாருங்கள்!  காலிமுகத்திடல் - அன்றும் இன்றும்                          (நன்றி:  roar.lk ) இலங்கையின் முக்கியமான சாலைகளில் ஒன்றான "காலி வீதி" துவங்கும் இடம் என்பதாலேயே, காலிமுகத்திடலுக்கு அப்பெயர் வந்தது. முன்பு சதுப்புநிலமாக இருந்த இது, ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் முயற்சியால் இன்று போல், மாபெரும் களியாடுகளமாக மாற்றப்பட்டிருக்கின்றது பிரித்தானியர் காலத்தில் கொழும்பின் முதன்மையான வணிகர்களுள், தமிழ்நாட்டுச் செட்டியார்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்கள் வசித்த இடம் தமிழ்வழக்கில் புறநகர்ச் சந்தையைக் குறிக்கும் "பேட்டை" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அது "பெற்றா" என்று மருவியது. அதேபொர...

வெண்மையும் பன்மையும், பண்பாட்டின் அழகியல்!

Image
கேரளப் பண்பாட்டாடையில் சுற்றுலாப்பயணிகள் படம்:  tripadvisor.in மலையாள நாட்டவரின் பொன்னிறக்கரை கொண்ட தூவெள்ளை ஆடை மீது எனக்குப் பெரும் கிறக்கம் உண்டு. அதுபோலவே எல்லா மங்கல – அமங்கல நிகழ்வுகளிலும் சிங்களவர் அணியும் வெண்ணிறாடைகள் ‘இனம்’ (?!) புரியாத ஒரு மதிப்பை அவர்கள் மீதும் ஏற்படுத்துவதுண்டு. ஆனால், தமிழருக்கென்று இத்தகைய நிற விதிகள் எதுவும் இல்லை. தமிழரின் ஆடை அலங்காரங்கள் பகட்டானவை. சில இடங்களில் அவை சமூக ஏற்றத்தாழ்வை வெளிக்காட்டுவனவாகவும் அமைவதுண்டு. இதுபற்றிய விவாதமொன்றில் , மலையாளிகளும் சிங்களவரும் தமிழருக்கு எத்தனை நெருக்கமான பண்பாட்டுப் பங்காளிகள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களைப் போலவே தமிழரும் வெண்ணிறாடையை தம் சீருடையாக ஏற்றுக்கொண்டால் நல்லது என்று கருத்துத் தெரிவித்திருந்தேன். குறைந்தபட்சம் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்குச் செல்லும்போதாவது தமிழச்சிகள் அதைக் கடைப்பிடிக்கலாமே என்று அந்த விவாதம் வளர்ந்தது (ஆண்கள் ஏற்கனவே வெள்ளை வேட்டி அணிகிறார்கள்) பின்பு அது “விதவையரின் ஆடைநிறம்” (மெச்சிங்கா தலையில மல்லிகைப்பூ வைங்களன்?) என்றும் “...

அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்

Image
சங்க இலக்கியமான கலித்தொகையைப் புரட்டவேண்டி வந்தது. கண்ணில் பட்டது இந்த வரி. “புறம் புல்லின் அக்குளுத்து புல்லலும் ஆற்றேன்; அருளிமோ, பக்கத்துப் புல்லச் சிறிது. ” (கலி.94)

மரபில் அறிமுகம் வேண்டும்!

Image
"தளபதி" திரைப்படத்தின் "ராக்கம்மா கையத்தட்டு" பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? குறிப்பாக அதில் இந்தப்பாகத்தை யார் அதிகம் இரசித்திருக்கிறீர்கள்?                                               நீங்கள் "90 kids" அல்லது "2K kids" வகையறா என்று பெருமை பேசுபவர் என்றால் இந்தப் பாட்டோடு சேர்ந்து இன்னொரு காட்சியும் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.                                                இந்தப் பாடல்வரிகள் மூன்றாவது தடவையாக இன்னொரு திரைப்படத்தையும் நினைவூட்டலாம், நீங்கள் தீவிர அஜித் விசிறி என்றால்! வீரம் திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? என்றால் இந்தக் காட்சியையும் பார்த்துவிட்டு வந்து விடுங்கள். ஏன் இப்படி ஒரே பாடல் இடம்பெற்ற மூன்று திரைப்படக் காட்சிகளை வரிசையாகப் பார்க்கச் சொல்கிறாய் என்றால், "குனித்த புருவமும்" என்று தொடங்கும் பாடல்...

வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)

Image
மட்டக்களப்பு எட்டுப்பகுதியின் தேசத்துக்கோவில் ! வரலாற்றில் திருக்கோவில் பாகம் 01 வரலாற்றில் திருக்கோவில் பாகம் 02 இலங்கையின் பிறபகுதியைச் சேர்ந்த நண்பன் ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பேச்சோடு பேச்சாக, “இலங்கையில் இன்று வழிபாட்டுக்குத் தகுதியாக எஞ்சியிருக்கும் புராதனமான சைவசமயக் கட்டுமானங்கள் மூன்றே மூன்று தான். ஒன்று இரண்டாம் சிவாலயம் என்று இனங்காணப்படும் பொலனறுவை வானவன் மாதேவீச்சரம்; இரண்டாவது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்; மூன்றாவது சிலாபம் முன்னேச்சரம். மூன்றிலும் திருக்கோவிலும் முன்னேச்சரமும் தான் இன்றும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த இரண்டில் கூட திருக்கோவிலே பழைமையானது.” என்றேன். அவன் “போடா” என்றான். “பொலனறுவையும் முன்னேச்சரமும் சரி. திருக்கோயில எப்பிடி பழைய கோயிலெண்டு சொல்லுவாய்?” என்று அவன் கேட்டான். “கோட்டை, கண்டி மன்னர்களுடன் தொடர்புறும் வரலாறு அதற்கும் உண்டு.” நான் ஊர்ப்பற்றால் மிகைப்படுத்திப் பேசுகிறேன் என்ற அவநம்பிக்கை, அவன் முகத்தில் தெரிந்தது. “திருக்கோயில் மட்டக்களப்பெல்லோ? அங்கெப்பிடி கோட்டை – கண்டி மன்னனெல்லாம் வந்திருப...

வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 02)

Image
அசவீடோ அழித்த அருஞ்சிற்பக் கூடம்! வரலாற்றில் திருக்கோவில்  - பாகம் 01 திருக்கோவில் பற்றிய இன்றைய கட்டுரை, மகிழ்ச்சியை விட, சோகத்தையும் ஏக்கத்தையுமே உங்கள் மத்தியில் எஞ்சவிட்டுச் செல்லப்போகிறது. ஏனென்றால் நாம் இந்த வாரம் பார்க்கப் போவது, திருக்கோவில் இடித்துத் தள்ளப்பட்ட கதையை! போர்த்துக்கேயர் இந்தத் திருத்தலத்தில் செய்திருக்கக் கூடிய நெஞ்சைப் பிழியும் அட்டூழியங்களை! சுற்றாலையில் கேட்பாரற்றுக் கிடக்கும் உடைந்த தூண்கள், திருக்கோவில் திருக்கோவிலில் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த கற்றூண்களையும், கற்பாளங்களையும் காணலாம். திருப்பணி வேலைக்காகத் தோண்டிய இடத்திலெல்லாம் வேலைப்பாடு கொண்ட கற்றுண்டங்கள் கிடைத்தவாறே இருக்கின்றன. பழைய கற்றளி மண்டபங்கள் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இவை. ஆனால், ஆலயம் முற்றாக உடைக்கப்படவில்லை. அல்லது உடைக்கப்படும் போது, அரசியல் செல்வாக்கால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது! ஆம். பேராசிரியர் இந்திரபாலா உறுதியாகவும், பேராசிரியர் பத்மநாதன் சற்று ஐயத்துடனும், திருக்கோவில் கருவறை 13ஆம் நூற்றாண்டு பாண...

வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)

Image
திருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் ! ('கோவில்' என்பது சைவரைப் பொறுத்தவரை மிகப்புனிதமான சொல். ஆனால் ஒரு ஆலயம் மாத்திரமன்றி ஒரு ஊரே 'திருக்கோவில்' என்று அழைக்கப்படும் பெருமையை தமிழகத்தில் கூட எந்தவொரு தலமும் பெற்றதில்லை. அந்த விதத்தில் ஈழவளநாடும் கீழைக்கரையும் பெருமைப்படும் படி கோவில் கொண்ட இறைவன் திருக்கோவில் சித்திரவேலாயுதன். கிழக்கிலங்கையின் முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் புகழ்பெற்ற முருகத்தலமாகவும் விளங்குகின்ற திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் கடந்த ஆண்டு 2018 யூன் 25ஆம் திகதி அன்று திருக்குடமுழுக்குக் கண்டது. அதை முன்னிட்டு அரங்கம் பத்திரிகையில்  வெளியானது இந்த வரலாற்றுக் கட்டுரைத்தொடர்.) திருக்கோவில் இலங்கையின் மிகப்புராதனமான வழிபாட்டிடங்களில் ஒன்று. சரி. வெளிநாட்டிலிருந்து வந்த ஐரோப்பியர் திருக்கோவிலைப் பற்றி எங்காவது குறிப்பிட்டிருக்கிறார்களா? இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன், அக்கோவில் அவர்களால் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறது? இப்படித் தேடிப்பார்க்கும் போது கொஞ்சம் சுவாரசியம் அதிகமாக இருக்கும். கூடவே வரலாற்று ரீதிய...

அம்பாறை மாவட்டம் பிறந்த கதை!

Image
இலங்கையின் இளைய வயதுடைய நான்கு மாவட்டங்களில் ஒன்று அம்பாறை மாவட்டம். அதற்கு இன்று வயது வெறும் ஐம்பத்தேழு தான். அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி , 1961 இ ற்கு முன்பு ,   மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சொந்தமாக இருந்தது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்து உருவாகக் காரணமாக இருந்த   உள்ளூராட்சிப் பிரிவுகள் எவை , அது உருவான பின்னணி என்ன என்பதை நாம் இங்கு சுருக்கமாகப் பார்க்க இருக்கிறோம். அப்படிப் பார்ப்பதென்றால் மட்டக்களப்பிலிருந்து தான் தொடங்கவேண்டும்.

“நாம் இந்து அல்ல; சைவர்கள்”

Image
இலங்கை சைவநெறிக் கழகம் நிகழ்த்திய “சைவம் போற்றுதும்” எனும் கலைவிழாவானது கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி (சனிக்கிழமை) கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் கோலாகலமாக இடம்பெற்றது. அங்கு கவனிப்பதற்கு இரு விடயங்கள் இருந்தன.

கரையைக் கொள்ளும் கடலன்னை

Image
கிணற்றைக் கொண்ட கடல், திருக்கோவில் நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் வசிப்பவர் என்றால், அல்லது அம்பாறை மாவட்டத்தில் உறவினர்களைக் கொண்டிருப்பவர் என்றால், எப்போதாவது அங்குள்ள கடற்கரையொன்றுக்குச் செல்பவர் என்றால், ஒரு விடயத்தை அவதானித்திருக்கலாம். அது கடலரிப்பு!

தண்டமிழ் திகழும் தண்பொழில்வில்லூர்

Image
அந்த ஊரின் பழைய பெயர் தம்பதிவில். சோழ அரசி தம்பதி நல்லாளின் நினைவாக அவள் மகன் மனுநேய கயவாகு, ஒரு குளம் கட்டி அந்தப்பெயரைச் சூட்டியதாக மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும். காலனித்துவ இலங்கை வரைபடங்களில் அவ்வூர் தம்பொலிக்குளம், தமொலிகாமம், தம்பலி ஊர் என்றெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை முஸ்லீம்களின் இனத்துவ அடையாளம்

Image
"இனம் என்பதற்கு வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் ஏன் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழ் இனமாக இல்லை?” என்பது வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி. முகநூலில் இவ்வினா தொடர்பான ஒரு நண்பனின் பதிவுக்கு அளிக்கப்பட்ட பதில் இந்தப் பதிவு. "இலங்கை முஸ்லீம்கள் ஏன் தமிழர் இல்லை?" என்ற இந்தக் கேள்வியை வேறு விதமாக இரண்டாகக் கேட்கலாம். ஒன்று, “மதம் சார்ந்து இனத்தை வரையறுக்கலாமா?” இரண்டு, “ஒரே மொழி பேசுவோர் எல்லோரும் ஒரே இனம் தானே?”

திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு!

Image
தமிழருக்கான ஆண்டுக்கணக்குக்கு "திருவள்ளுவர் ஆண்டு" என்று பெயர். நாட்காட்டிகளிலோ பஞ்சாங்கங்களிலோ பார்த்தீர்கள் என்றால் "திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு" என்று போட்டிருப்பார்கள். 2026ஆம் ஆண்டு ஜனவரி 13இல், அதாவது தை முதலாம் திகதி, திருவள்ளுவர் ஆண்டு 2057 பிறந்தது.  கிரகோரியன் நாட்காட்டியுடன் 31 ஆண்டுகள் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும். ஆனால் அந்த ஆண்டுத்தொடரின் தோற்றத்தின் பின்னே இருந்த சமூக, அரசியல், வரலாற்றுக் காரணிகள் என்னென்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது.  நீங்கள் இதற்கு முன் திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு பற்றி வேறெங்கும் தேடி விட்டு வந்திருந்தீர்களானால் ஒன்றை அவதானித்திருக்கலாம். திருவள்ளுவர் ஆண்டு இணையத்தில் காணக்கிடைக்கும் கட்டுரைகள் எல்லாமே வரலாற்று நோக்கு என்பதே துளியும் இன்றி, யாரோ ஒருவர் சொன்ன ஒரே விடயத்தை மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் சொல்பவை. எவ்வித ஆதாரங்களும் அற்றவை. அவற்றில் வரலாற்றுணர்வோ யதார்த்தமோ சிறிதும் இல்லை.   மேலை நாடுகளின் காலக்கணிப்புக்காக கிரகோரியன், யூலியன் என்பனவும், அரபுலகு மற்றும் இஸ்லாமியர...