Posts

Showing posts with the label அகலிகை

நித்திய கன்னியர்

Image
சிறுவயதில் அம்மா எனக்குத் தலையில் எண்ணெய் வைக்கும் போது ஒரு மந்திரம் சொல்வார் " மாவலி பரசுராமன் வாயுமைந்தன் வாசுதேவன் மேவிய சுக்கிரீவன் விளங்குகின்ற விபூசணன் என்றென்றும் பதினாறு வயது மார்க்கண்டனாக இருக்கக்கடவாய் ." இதில் சொல்லப்படும் ஏழு பேரும் வைதிக மரபில் ஏழு சிரஞ்சீவிகளாக , சாகாவரம் பெற்று வாழ்பவர்களாக சொல்லப்படுபவர்கள் ( இந்தப் பட்டியலில் வேறு பெயர்களும் இடம் பெறுவதுண்டு ). இப்படி ஆண்கள் நினைத்துப் பார்க்கவேண்டியவர்கள் என்று சொல்லப்படும் ஏழு சிரஞ்சீவிகள் போலவே , பெண்கள் தினமும் காலையில் நினைத்துப் பார்க்கவேண்டியவர்களின் பட்டியல் ஒன்றும் நம் மரபில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது . பஞ்சகன்னியர் . அந்த ஐந்து கன்னியரும் திரௌபதி , குந்தி , தாரை , மண்டோதரி , அகலிகை . ( குந்திக்குப் பதில் சீதை சொல்லப்படும் பட்டியலும் உண்டு .) இந்தப் பட்டியலில் உள்ள முரண்நகை என்னவென்றால் இந்த ஐவரும் வழக்கமான அர்த்தத்தில் கன்னியரே இல்லை . திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் . குந்திக்கும் கணவர் ஐந்து பேர் . அகலிகை , ...