Posts

Showing posts with the label நாயக்கர்

அறவாழி

Image
- 1 - காலை நேரத்தின் மெல்லிய சலனத்தைக் கிழித்துக்கொண்டு அந்த செம்மண்பாதையில் பாய்ந்துசென்ற குதிரை, கனைத்தபடி  இரத்தளை மாளிகையின் முன் மெல்ல நின்றது. குதிரையிலிருந்து தாவி இறங்கிய காவலன் சீரான அடிகளுடன் நடந்துசென்று மாளிகையின் வாசலில் நின்றான். மாளிகை மறுபடியும் மென்சலனத்தைச் சூடிக்கொள்ள, குதிரையின்  கால் மாற்றும் ஓசையும் அதனால் சேணத்தில் தொங்கிய சிறுமணிகள் அசைந்த இன்னோசையும் மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. இரத்தளை வமிசத்தாருக்கே உரிய கம்பீரமான மாளிகை அது. கண்டி நாட்டின் அரசவையில் வீற்றிருக்கும் அதிகாரங்களையும் திசாவைகளையும் பிரசவிக்கும் பெருங்குடி இரத்தளை. அதன் மாளிகை எளிமையாகவும் சிறிதாகவும் இருந்தால் தானே வியக்கவேண்டும். சுற்றிவரப் பார்வையை ஓடவிட்ட காவலன், மெல்லிய அசைவு தென்பட பார்வையைத் திருப்பினான். மாளிகை வாசலை நோக்கி உள்ளிருந்து அவள் வந்துகொண்டிருந்தாள். வாசலை அடைந்ததும் அவள் புருவங்கள், என்ன என்று கேட்பது போல் சற்றே சுருங்கின. இடையில் சுமந்திருந்த கைக்குழந்தை, பாலூட்டியதை நிறுத்திவிட்ட கோபத்தில் அவள் மார்புக்கச்சையை இழுத்துச் சிணுங்கிக்கொண்டிருந்...