Posts

Showing posts with the label புத்தநெறி

சாகாமம்

Image
சாகாமம் எங்கள் ஊரை அடுத்திருக்கும் கிராமம். போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாத, குறைந்தளவிலான மக்கள் வாழும் பின்தங்கிய கிராமம். ஆனால் அது இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவான இடம். மகாவம்சத்திலேயே பதிவாகி இருக்கிறது. சோழர் காவலரணாக. மகாவம்சத்தின் 58ஆம் அத்தியாயத்தில் விஜயபாகு சோழர்களை நோக்கிப் படையடுத்தது இப்படிச் சொல்லப்படுகிறது. "சோழர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, (விஜயபாகு) மன்னனின் இன்னும் இரு திறமை வாய்ந்த அதிகாரிகள் கரையோர 'வெள்ள மகாபத' பெருஞ்சாலை வழியே அனுப்பப்பட்டார்கள்...... அவர்கள் சாக்காமத்திலும் அதன் அருகே அங்குமிங்கும் இருந்த (சோழர்) காவலரண்களை சூறையாடினார்கள்." (மகாவம்சம் 58:41 - 47).  சோழர்களின் ஆதிக்கம் கிழக்கிலங்கையில்  சாகாமம் வரை பரந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்வார்கள். சாகாமத்துக்குக் கிழக்கே உள்ள திருக்கோவில் ஆலயத்தை சோழர்களுடன் இணைக்கும் மரபுரைகளையும் இங்கு இணைத்து நோக்கலாம். விஜயபாகுவுக்கு நூறாண்டுகள் பிந்திய மகா பராக்கிரமபாகு மன்னனும் சாகாமத்தில் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறான் என்பதையும் அதே மகாவம்சம் பதிவுசெய...

வெல்கம் வேரத் தேவர்

Image
அரசியல், சூழ்நிலைக் காரணங்களால், புத்தபிரான் இன்று தமிழராலும் வெறுக்கப்படுபவராக மாறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் நம் முப்பாட்டன்மாருக்கு எத்தனை நெருக்கமானவராக இருந்தார் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. அப்படியும் அதில் சிறிது ஐயமிருந்தால், நீங்கள் செல்லவேண்டிய இடம் ஒன்று இலங்கையில் இருக்கிறது. சிங்கள வரலாற்றாசிரியர்களே தமிழ்ப்பௌத்த விகாரை என்று சான்றிதழ் கொடுத்த இடம். திருக்கோணமலையின் வெல்கம் விகாரை. வெல்கம் வேரத் தேவர்   கடந்த வாரம் நண்பர்களோடு திருக்கோணமலை சுற்றுலா சென்றபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சரித்திரப்புகழ் வாய்ந்த கன்னியா வெந்நீரூற்றுக்கு வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது வெல்கம் விகாரை. சோழர் படையெடுப்பின் பின் 'ராஜராஜப்பெரும்பள்ளி'. அது தெற்கு நோக்கியதாக சதுரமான அமைப்பில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மையத்தில் சுண்ணக்கல்லாலான புத்ததேவரின் திருவுருவம் நின்ற நிலையில் காட்சியளிக்க, சுற்றி வந்து வணங்கும் வகையில் கருவறை அமைக்கப்பெற்றிருந்தது. கருவறையின் முன்பு, வலம் இடமாக இரு சி...