Posts

Showing posts with the label குரவை

குரவை என்னும் ஆதியொலி

Image
குரவைச்சத்தம் கிழக்கிலங்கை மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்று . திருமணமா , நல்ல காரியங்களா , கோவில் திருவிழாக்களா , எல்லாமே குரவையொலியோடு ஆரம்பமாவதே இங்கு வழக்கம் . இப்போது பெருமளவு அருகி விட்டாலும் , இன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக குரவை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது . முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ்க் கிராமங்களில் மட்டுமன்றி முஸ்லிம் கிராமங்களிலிருந்து வீசும் காற்றும் அரிவையரின் குரவையொலியைத் தாங்கி வந்து வரவேற்றதை எண்ணி ஏக்கப்பெருமூச்சு   விடுவோர் இன்றும் இருக்கிறார்கள் . குரவை அயரும் வங்கக் குமரியர்   குரவை என்பது நாக்கையும் மேல் அண்ணத்தையும் மிக வேகமாக பயன்படுத்தி உயர்ந்த மீடிறனில் உருவாக்கப்படும் ஒரு மங்கல ஒலி .   பொதுவாக பெண்களே குரவையிடுவது வழக்கம் . இதை பேச்சு வழக்கில் குலவை என்பார்கள் . தமிழ்ப் பெண்கள் குரவையிடும் போது  வாயை வலக்கையால் மூடியபடி இடக்கையால் வலது முழங்கையைத் தாங்கியபடித் தான் குரவையிடுவது வழக்கம்.  அல்லது இடது கையை அருகிலுள்ள இன்னொரு பெண்ணின் தோளில் வைத்திருக்க வேண்டும்.  உலகெங்கும் பழங்குடிப்...