சுத்த சைவம்: சைவ மறுமலர்ச்சிக்கான பிள்ளையார் சுழி
சைவத்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான “பெரியபுராணம்” பற்றி ஒரு கதை இருக்கிறது. பெரியபுராணத்தை சேக்கிழார் தில்லையில் அரங்கேற்றி முடித்ததும், அப்போது சோழநாட்டை ஆண்ட அநபாயச் சோழன் (இரண்டாம் குலோத்துங்கச் சோழன் 1113-1150) , தன் பட்டத்து யானையில் அவரையும் நூலையும் தன்னுடன் ஏற்றி ஊர்வலமாகச் சென்றதுடன், தானே அவருக்குக் கவரியும் வீசினான். ஒரு பேரரசின் சக்கரவர்த்தி ஒரு நூலையும் அதன் ஆசிரியரையும் யானையில் ஏற்றி தானே சாமரம் இரட்டிக் கௌரவித்த பெருமையைத் தக்கவைத்ததாக உலகவரலாற்றில் பதிவு செய்துள்ள நூல், பெரிய புராணம் மாத்திரமே. கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னர், பெரியபுராணம் போலவே யானை மேல் எழுந்தருளிய பெருமையை சைவத்துக்கும் தமிழுக்கும் முக்கியமான இன்னொரு பெருநூல் தட்டிக்கொண்டது. அந்நூலின் பெயர் சுத்தசைவம். பெரியபுராணம் யானை மேலெழுந்தருளியது சோழமண்ணில். சுத்தசைவம் யானை மேலெழுந்தருளியது ஈழமண்ணில். கொழும்பு சம்மாங்கோட்டுப் பிள்ளையார் கோவிலில் சுத்தசைவம் யானை மீது எழுந்தருளல் “சுத்தசைவம்: வேத ஆகம மரபுகளும் பன்னிரு திருமுறை மெய்கண்ட சாத்திர உண்மைகளும் கூறும் வர்ணாசிரமம் நீங்கிய நன்மை ப...