Posts

Showing posts with the label பயணம்

காலம் மறைத்த ஒரு காப்பியக்கோவில்

Image
யாழ்ப்பாணத்தின்  வலிகாமம் மேற்கு பகுதியில் சண்டிலிப்பாய்க்கு  அருகே அமைந்துள்ள ஒரு ஊருக்கு மாசியப்பிட்டி என்று பெயர். அதை மாகியப்பிட்டி என்றும்  சொல்வார்கள்.அந்தப்பெயர் என் கருத்தைக் கவர்ந்த  ஊர்ப்பெயர்களில் ஒன்று. ஏனென்றால் சிங்களத்தில்  தமிழ்த் திசைச்சொற்கள் வந்து சேரும் போது சகரம் ஹகரம் ஆவது வழமை. சந்தி - ஹந்தி. சொதி - ஹொதி, இப்படிப் பல உண்டு. ஆனால் சகரம் ககரமாகத் திரியும் இலக்கண விதி ஈழத்தமிழுக்கும் பொருந்துமா என்று சிந்திக்கவைத்த பெயர்களில் ஒன்று இது. மாசியப்பிட்டி - மாகியப்பிட்டி.   மாகியப்பிட்டிக்கு மிக அருகே தான் பிரசித்தமான பௌத்தத் தொல்லியல் மையமான கந்தரோடை அமைந்திருக்கிறது.  யாழ் நகரிலிருந்து சுமார் 15 கிமீ தூரம்.  இந்தக் கட்டுரையாசிரியன் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்துக்கு  அடுத்தமுறை போகக் கிடைக்கும்  போது,  மாகியப்பிட்டிக்குப் போகவேண்டும் என்பது அவன் திட்டம். மாகியப்பிட்டிக்கா? காரணம் இருக்கிறது. அதற்கு முதல் ஒரு விடயம் சொல்லவேண்டும். ஒரு  தெய்வத்தை புகழ்ந்து பாடும் போது அத்தெய்வம் கோவில் கொண்ட எல்ல...