Posts

Showing posts with the label பேரிடர்

எறியப்படும் காலணியைப் பார்த்து புன்னகைத்தல்

Image
கிரிக்கெட்டில் எனக்கு அத்தனை ஆர்வமில்லை. என்றாலும் நண்பர்களின் தயவில் சில நேரங்களில் போட்டித்தொடர்களைக் காணும் வாய்ப்புக் கிடைப்பதுண்டு. கடந்த வார இறுதியில் ஐ.பி.எல் இறுதிப்போட்டியையும் அப்படித் தான் காணும் வாய்ப்புக் கிடைத்தது. ஏதோ நினைவு தூண்ட அருகிலிருந்த நண்பனிடம் "போன ஆண்டு ஐ.பி.எல் போட்டில சப்பாத்து எறிஞ்சது உனக்கு ஞாபகமிருக்கா?" என்று கேட்டேன். அவன் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தான். "டேய்... இந்தா எண்டமாதிரி இருக்குடா... நல்லா மறந்தே போய்ற்று என!" போன ஆண்டு ஐபிஎல் காலப்பகுதியில் தான் காவிரிப் போராட்டம் தமிழகத்தில் வெடித்திருந்தது. அதில் குறித்த போட்டித்தொடரொன்றில் போராளிகளால் மைதானம் நோக்கி காலணிகள் வீசப்பட்டிருந்தன. விளையாட்டுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த நிகழ்வு வெறும் ஓராண்டு காலப்பகுதியில் முற்றாக மறக்கப்பட்டுவிட்டது! செய்திகள் எத்தனை வலிமையானவையோ அத்தனை பலவீனமானவை. தினம் தினம், கணம் கணம், நாம் செய்திகளின் அலைகளால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறோம். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு உணர்ச்சித்தூண்டல். சிலவற்றைக் கேட்கும் போது மகிழ்...