Posts

Showing posts with the label வடமொழி

மேதியவுணன் கொல்பாவை

Image
"அயிகிரி நந்தினி" என்று துவங்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை நீங்கள் ஒருமுறையாவது கேட்டிருப்பீர்கள். பொருள்புரியாது கேட்டாலே சந்த அழகாலும் இனிமையாலும் மயக்கும் வடமொழித் துதி அது. ஆதிசங்கரர் இயற்றியது என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் கிடைக்கின்ற மரபுரைகளின் படி அதை இயற்றியவர், இராமகிருஷ்ணகவி. அந்தப்பெயரில் ஒரு வடமொழி அறிஞர் கடந்த நூற்றாண்டில் (1866 - 1957) தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார். பரதரின் நாட்டிய சாத்திரத்துக்கு காஷ்மீர சைவ அறிஞர் அபிநவகுப்தர் எழுதிய அபிநவபாரதி எனு ம் உரையை நூலாகப் பதிப்பித்தவர். நாட்டிய - இசை வடமொழிக் கலைச்சொல் அகராதியான பரதகோசமும் இவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. மேதிகொல்மாது சிற்பம், மாமல்லபுரம் உண்மையில் மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் என்பது, பகவதி பத்ய புஷ்பாஞ்சலி ஸ்தோத்ரம் எனும் துதியின் ஒரு பாகம் தான். மொத்தம் 30 சுலோகம் கொண்ட புஷ்பாஞ்சலி தோத்திரத்தில் 7 - 27 ஆவது வரையான 21 சுலோகங்களே இன்று மகிஷாசுரமர்த்தினி தோத்திரம் என்று அறியப்படுகின்றன. 29ஆம் சுலோகத்தில் தான் இதைப்பாடியது "ராமகிருஷ்ணகவி"யாகிய நான் என்று குறிப்பிடுகிறார் ஆ...