Posts

Showing posts with the label விபுலானந்தர்

விபுலானந்த அடிகளாரும் கலைச்சொல்லாக்கமும்

Image
திறவுச் சொற்கள்:  இலக்குமொழி (Target Language), ஒலிபெயர்ப்பு (Transliteration), கலைச்சொல் (Technical Term), சொல் வாங்குதல் (Calque), ஞால மாமொழி (Lingua Franca),  தடந்தகை (Strategy), புதுச்சொல்லாக்கம் (Neologism), பொருளுறை மொழியாக்கம் (Semantic Translation),  மூலமொழி (Source Language). 1.0 அறிமுகம் தமிழின் முதற்பேராசிரியர், தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டவர், மறைந்த யாழ் இசைக்கருவியையும் நாடகத்தமிழையும் மீட்க முயன்றவர் முதலிய பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் விபுலானந்த அடிகளார் . பிறமொழியில் அமைந்துள்ள அறிவுச்செல்வங்கள் ஒரு  மொழிக்கு மொழிமாற்றப்படுவது, அம்மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை நன்குணர்ந்திருந்த அடிகளார், தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவரவேண்டும் என்றும் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாகவேண்டும் என்றும் விடாது வலியுறுத்திவந்தவர். கலைச்சொல்லாக்கத் துறை சார்ந்த அடிகளாரின் சிந்தனைகள் இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, அடிகளார் கலைச்சொல்லாக்கம், மொழியாக்கம் தொடர்பில் கொண்டிருந்த கோட்பாடுகளை மதிப்பிட முயலும் இவ்வாய்வுக்கட்டுரை,...