பிறந்தகத்தை ஆவணப்படுத்தல்
பிறந்த மண்ணை பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற ஆசை எப்போதிருந்தோ இருக்கிறது. ஆனால் அந்நூல் தகவல் தொகுப்பில் முழுமையானதாக, ஏனைய ஊர் வரலாற்று நூல்களுக்கு முன்மாதிரியானதாக அமைய வேண்டும் என்பதில் கூடிய சிரத்தை எடுப்பதால் தள்ளிக்கொண்டே போகிறது. மூன்றாண்டுகளுக்கு முன், நூலகம் நிறுவனத்தின் 'ஊர் ஆவணப்படுத்தல்' செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டபோது, நூலின் உள்ளடக்கத்துக்கான ஒரு வரைவை தயாரித்துக்கொள்ள முடிந்தது. எனினும் தகவல் சேகரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் செயற்றிட்டத்தில் முழுப்பங்களிப்பை அளிக்க முடியவில்லை. (அந்த வரைவை ஆவணகம் வலைத்தளத்தில் இங்கு படிக்கலாம்.) எனினும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்யலாம் என தீர்மானித்தேன். எனது தகவல் சேகரத்தின் ஒரு பகுதியை தம்பியொருவனின் பாடசாலை ஆண்டு மலருக்கு வழங்கினேன். அதைத் திருத்தி இன்னும் சில விடயங்களை சேர்த்து, மறைந்த சகோதரர் அமரர். கோவேந்தன் அண்ணாவின் நினைவு வெளியீடான ' கோவேந்த வியாசத்துக்கு ' வழங்கினேன். எதிர்பார்த்தது போலவே அக்கட்டுரை ஊரில் சலசலப்பை உண்டாக்கியது. குறிப்பாக அக்கட்டுரையில் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்த ஊரின் சமூக அடுக்கு ச...