Posts

Showing posts with the label சிவனொளிபாத மலை

ஒல்லாந்தரை ஏமாற்றிய பாதிரியாரின் முக்காடு

Image
மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் படுவான்கரைக் கிராமங்களை இணைத்தபடி ஓடுகிறது B18 வழித்தட எண் கொண்ட வீரமுனை - அம்பிளாந்துறை வீதி. மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும் இடையே அதன் எட்டாம் கிமீ மைல்கல்லுக்கு (மைல்கல்லா கிலோமீட்டர் கல்லா? 🤔) அருகில் நின்று மேற்கே பார்க்கும் போது இந்த மலையைக் காணலாம். இங்கிருந்து மட்டுமல்ல. மேகமூட்டம் இல்லாத நாளொன்றில் கீழைக்கரையில் தெற்கே கோமாரியிலிருந்து வடக்கே மட்டக்களப்பு நகரம் வரை மேற்குப்பக்கம் திரும்பி நின்றால் இதைக் காணலாம் என்கிறார்கள். அம்பாறை மாவட்டம் உகணைக்கு அருகே உள்ள வெலிம்பே ஹெல (Walimbe Hela) என்ற மலை தான் இது.   வெலிம்பே ஹெல வெலிம்பே ஹெல இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய மலை.  655 மீ உயரமானது. ஆங்கிலத்தில் Fraiar's Hood என்று பெயர். பொருள் பாதிரியாரின் முக்காடு. தூரத்தில் நின்று பார்க்கும் போது சில குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் மதகுருமார் அணியும் தலையணி போல் தென்பட்டதால் இதை வெள்ளையர்கள் அப்படி அழைத்திருக்கிறார்கள்.  பாதிரியாரின் முக்காடு மலை, ஒரு கிட்டிய தோற்றம் (Credits: lakdasun.lk) இ...

சிவனொளிபாதப் புகழ் அறிவீரே!

Image
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டுவரும் விடயம், சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம். இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமான சிவனொளிபாதத்தில் இதுநாள் வரை இருந்த “சிவனொளிபாதம்” என்ற பெயரை நீக்கி, தமிழிலும் “புத்த ஸ்ரீபாதஸ்தானம்” என்று மாற்றப்பட்டுள்ள ஒரு பெயர்ப்பலகை தற்போது பரவலாகப் பகிரப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது. சிவனொளிபாத மலை (படம்:  http://refreshingsrilanka.blogspot.com ) உண்மையில், இந்தப்பெயர்ப்பலகை கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளைச் சந்தித்து வரும் ஒன்று. இப்பலகையில் முன்பு , சிங்களத்தில் “ஸ்ரீபாதய” என்றும், தமிழில் “சிவனொளிபாதமலை” என்றும், ஆங்கிலத்தில் “அடம்ஸ்பீக்” என்றும் எழுதப்பட்டிருந்தது. 2012இல் எடுக்கப்பட்ட  புகைப்படம். (நன்றி:  https://gate20.com ) ஆனால், 2016ஆமாண்டு, இதில் இருந்த “அடம்ஸ்பீக்” எனும் ஆங்கிலவரிகள் விஷமிகளால் அழிக்கப்பட்டிருந்தன .  சிவனொளிபாதச் சூழலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் சுற்றுலாவிடுதிகள் அமைக்கப்பட இருப்பதாக பரவிய செய்தியையும் , அதை மறுத்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையையும்  அடு...