Posts

Showing posts with the label சமூகவியல்

இல்லிறப்பு: கண்ணகியும் கார்வண்ண இராமனும்

Image
  இரண்டு பதிவுகளைக் கடந்துவர முடிந்தது. ஒன்று இராவணனை தங்கள் முப்பாட்டனாகப் புகழ்ந்து இராமனை இகழும் பதிவு. அது சூர்ப்பனகை மூக்கறுப்பு, வாலிவதம், சீதையின் தீக்குளிப்பு என்று இராமனை விமர்சித்தபடி சென்றது. இன்னொன்று, சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரப்படைப்பை கேலி செய்வது. மாற்றாளிடம் சென்று திரும்பிய கணவனை கையாலாகாமல் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, வெளியூர் போய் அங்கும் பிரச்சினை ஏற்படுத்திய கண்ணகியை வெட்கமில்லாமல் கொண்டாடுகிறார்கள் என்றது அது. அதிகம் உறுத்தியது அந்தப்பதிவுகள் அல்ல. அவை இரண்டின் சாராம்சமும் என்னவென்றால், சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற வசனம். இரண்டுமே இன்றுவரை தமிழின் மிகச்சிறந்த படைப்புகளில் வைத்து எண்ணப்படுபவை. இவர்கள் சொல்வது போல, இந்த இரு நூல்களும் காலாவதியாகி விட்டனவா? இவற்றை தமிழர்கள் கொண்டாடத் தேவையில்லையா? இவற்றில் சரிபிழை கூற முன்பு, இரண்டு இலக்கியங்களும் சந்திக்கும் முக்கியமான புள்ளி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மணவாழ்க்கை. இரு துணைகளுக்கிடையிலான கலவி, திருமணம் மூலமே சமூக அங்கீகாரம் பெறுகிறது. திருமணத்...

தெய்வத்தை விழுங்குதற்கான அரக்கனின் தவம்

Image
ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 நவம்பர் 21இல் "ஈழத்தில் கண்ணகி வழிபாடு" என்ற தலைப்பில் இடம்பெற்ற சூம் கலந்துரையாடல் யூடியூப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. வாய்ப்பளித்த லம்போதரன் ஐயாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ( உரை- 4:45 - 47:00 தொடர்வது: கலந்துரையாடல்) அந்த உரையின் தொடர்ச்சியாக ஒரு விடயத்தைப் பதிவுசெய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். இது கிழக்கிலங்கையை மையமாக வைத்த கருத்து என்றாலும், முழு தமிழ் கூறு நல்லுலகுக்கும் பொருந்தும். தமிழகத்திலும் வட இலங்கையிலும் முழு முன்னெடுப்பில் எடுத்துச் செல்லப்படும், தனித்தமிழ் வழிபாடு என்ற கோட்பாடு கிழக்கிலங்கையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பது முக்கியமான சமூகவியல் அவதானிப்பு. காரணம் எளிமையானது தான். இங்கு தனித்தமிழில் வழிபாடு செய்வது புதுமை இல்லை. தமிழ்ப் பத்ததிகளின் வழியில், தமிழ் மந்திரங்களும் அகவல் காவியங்களும் பாடி , சடங்கு இடம்பெறும் மரபார்ந்த நாட்டார் தெய்வக் கோவில்கள் இங்கு ஏற்கனவே ஊருக்கு ஊர் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் (வட) இலங...

"குடி" - கீழைக்கரையின் தாய்வழிப் பாரம்பரியம்

Image
சில வாரங்களுக்கு முன் கொம்புமுறி பற்றிய உரையாடலொன்றில் ஈடுபட்டிருந்தோம். அப்போது வடபுல நண்பர்கள் சிலர், கிழக்கில் தாய்வழி பார்ப்பது எப்படி என்று கேட்டிருந்தார்கள். தமிழகமோ, இலங்கையோ, எங்குமே தந்தை வழியில் பூர்விகம் பார்ப்பதே வழக்கமாக இருக்க, கிழக்கில் தாய்வழியை வைத்துத் தான் பரம்பரை, பூர்வீகம் எல்லாம் பார்க்கிறார்கள் என்று நான் சொன்னது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. பரம்பரை பற்றி பேசவேண்டுமென்றால், சாதியம் பற்றியும் பேசியாக வேண்டும். பொதுவெளியில் அது போன்ற உணர்திறன் மிக்க விடயங்களைப் பகிர்வதில் தயக்கம் இருந்தாலும், சமூகவியல் மானுடவியல் ரீதியில் முக்கியமான இந்தக் கேள்வியை தவிர்க்கமுடியாமல், மேலோட்டமாக மட்டும் இதை எழுதுகிறேன். கிழக்கிலங்கை, கீழைக்கரை என்று பொதுவாகச் சொன்னாலும் இங்கு குறிப்பாகச் சொல்லப்படும் நடைமுறைகள் இன்றைய மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை, அதிலும் ஓரிரு தமிழ் – முஸ்லீம் பழம்பெரும் கிராமங்களில் மாத்திரமே வழக்கத்திலிருப்பவை, பல இடங்களில் அருகிப்போய் விட்டவை என்பதையும் நாம் நினைவில் இருத்த வேண்டும். கிழக்கின் சாதிகள், ‘குடிகள்’ என்ற பெயர...

தண்பொழிலூர் கொம்புமுறி

Image
கிழக்கிலங்கையின் தமிழ்ப் பாரம்பரியங்களில் ஒன்றான 'கொம்புமுறி விளையாட்டு' பற்றி முன்பு 'உவங்களில்' எழுதியிருக்கிறேன் . கண்ணகி வழிபாட்டோடு இணைந்த மழை வேண்டும் கலையாடல் அது. இங்கு கொம்பு என்பது மரக்கிளை ஒன்று. அதை செவ்வாய்க்குற்றி, தாய்மரம் எனப்படுகின்ற இருவகை தாவரப்பாகங்களின் நடுவே உரிய முறையில் பொருத்தி இரு தரப்பினராகப் பிரிந்து வடத்தால் (கயிற்றால்) இழுக்கும் போது விசையால் ஒரு கொம்பு முறியும். முறியாத கொம்பு வென்ற கொம்பு என்று கொள்ளப்படும். சிங்களவர் மத்தியிலும் 'அங்கெலிய' என்ற பெயரில் வழக்கில் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகவே அருகி வருகிறது. என் பிறந்தகம் தம்பிலுவில் கிராமத்தில் இடம்பெற்ற கொம்புமுறி நேற்று நிறைவுக்கு வந்தது. தம்பிலுவில்லின் கொம்புமுறிக்கு பல தனித்துவங்கள் உண்டு. முதலாவது, கிழக்கிலங்கை பொதுவாக தாய்வழிச் சமுதாயம் தான் என்றாலும், கொம்புமுறியில் மட்டும், தந்தைவழியைப் பார்ப்பார்கள்.  தம்பிலுவில்லில்  கொம்புமுறியிலும் கூட தாய்வழி தான் பார்க்கிறார்கள். எப்படி என்றால், கொம்பு முறிப்பதற்காக பிறப்பின் அடிப்படையில் அம்மாளுக்கு (கண்ணகி), சாமிக்கு (...

“சேட்டைக் கழட்டுங்க முதல்!” அறியாமையின் ஆணவக்குரல்

Image
நன்றி: arayampathy.lk தலைப்பின் முதல் வரியை வாசித்து விட்டு நீங்கள் ஏடாகூடமாக ஏதும் யோசிக்கக்கூடாது என்று தான் உபதலைப்பு. அறியாமையின் ஆணவக்குரல். என்ன அறியாமை? என்ன ஆணவம்? இதுக்கும் சேட்டக்கழட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்? ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் கிழக்கிலங்கையின் தனிச்சிறப்பான கண்ணகிச் சடங்கு பருவ காலம் இனிதே நிறைவுற்றிருந்தது. அதன் பின்னணியில் ஆரையம்பதி முதல் தம்பிலுவில் வரை 15 கண்ணகி அம்மன் ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் வாய்ப்பு இந்தக் கட்டுரையாளனுக்குக் கிடைத்திருந்தது. நாட்டின் தற்போதைய சூழ்நிலைமை காரணமாக வழக்கமான கொண்டாட்ட மனநிலையை எந்த ஊரிலும் காண முடியவில்லை என்றாலும், அந்தப் பருவ காலத்துக்கே உரிய இயல்பான மலர்ச்சியை எங்குமே தவறவிட்டதாகத் தெரியவில்லை. எனினும், இந்த ஆண்டு குறிப்பாகக் கண்ட ஒரு விடயம் அதிகமாக உறுத்தியது. சுமார் ஐந்திற்கு மேற்பட்ட கண்ணகி ஆலயங்களில் "ஆண்கள் மேலாடையின்றி உட்செல்லவும்" எனும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் எத்தனை ஆலயங்களில் இந்த வழக்கம் நீண்ட நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அந்த அறிவிப்புக...

சுராங்கனிட்ட மாலு கெனாவா

Image
இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற " சுராங்கனி " பாடலை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இலங்கையின் பொப்பிசை மன்னன் ஏ.ஈ.மனோகரனால் 1970களில் எழுதப்பட்ட இப்பாடல், இலங்கை வானொலியால் தமிழகத்திலும் களை கட்டியது. பிற்காலத்தில் இந்தி   மற்றும்   கொங்கணி யிலும் மொழிமாற்றப்பட்டு பட்டையைக் கிளப்பியது.  சில ஆண்டுகளுக்கு முன், விஜய் அண்டனி ,  தினேஷ் கனகரட்ணத்தின் தயவில் மீண்டும் பரவலாக பேசப்பட்டது. இப்போது விடயம், சுராங்கனி பாட்டு அல்ல, அந்தப் பாட்டில் வரும் "சுராங்கனி"யைத் தெரியுமா? யார் அந்த சுராங்கனி? அதைப் பார்ப்பதற்கு முன் சுராங்கனி இடம்பெறுகின்ற ஒரு சிங்கள நாட்டார் கதையொன்றை நாம் பார்க்கவேண்டும்.  ரவிவர்மாவின் மோகினி ஓவியம் ஊஞ்சலில் அமர்ந்து சந்தோசமாக பாடல் பாடி ஆடிக்கொண்டிருந்தாள் சுராங்கனி. தூரத்தில் யாரோ தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு. "யாரது?" என்றபடியே திரும்பினாள். மரத்தின் மறைவில் இருந்து வெளியேறினான் அந்த இளைஞன்.  பேரழகன். அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்க...

சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

Image
கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை. சபரிமலை ஐயப்பன் கோவில்.    முதல் இரு தீர்ப்புகளைப் பொறுத்தவரை, அவை மறைமுகமாகவோ சிறிய அளவிலோ ஏற்கனவே நம் சமூகத்தில் வழக்கில் இருந்து வந்தன. புராணங்களில் பாலினச்சிறுபான்மையினர் பற்றிய குறிப்பு எதுவும் தெளிவாக இல்லை. என்றாலும், ஆண் பெண்ணாக மாறுவது (மோகினி,  இளை), பெண் ஆணாக மாறுவது (சிகண்டி), திருநங்கைகள் (பிருகன்னளை) பற்றிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டு கஜூராகோ கலவிச்சிற்பங்களிடையே ஆண்-ஆண் கலவியும், பெண்-பெண் கலவியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருமணத்துக்கு அப்பாலான உறவுகளுக்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான புராண - இதிகாசக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன.  இதெல்லாம் ஏன் இன்று குற...