Posts

Showing posts with the label திருக்கோணமலை

கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று

Image
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் , திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு , இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .   இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் ப . புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா . இந்திரபாலா (2021:8,18) ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான – அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர் . இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை,   அவர்களால்   கலிங்க மாகோனாக அடையாளம்   காண   முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது . கலிங்க மாகோனை    பாலி  -  சிங்கள   நூல்கள்   கொடுங்கோலனாகவும் ,  இலங்கைத்   தமிழ்   நூல்கள்   சரித்திர   நாயகனாகவும்   சித்தரிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.    கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு :   [ சிதைந்த வடமொழி சுலோகம் ]   ஸ்வஸ்திஸ்ரீ …… .[ த்திகள் ?] [ ஸ்...

ஹம்ச கமனா

Image
தம்பலகாமம் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். பிறந்தகத்தின் பெயரை ஒத்திருப்பதாலோ என்னவோ அவ்வூர் மீது எனக்கு நெடுநாளாகவே ஈர்ப்பு உண்டு. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அது திருக்கோணமலையின் நான்கு பற்றுக்களில் ஒன்றின் தலைநகராக இருந்தது. பற்று என்பது பழங்கால இலங்கையின் ஒரு நிர்வாக அலகு. இன்று மாகாணம், மாவட்டம், பிரதேசம், கிராம சேவகர் பிரிவு என்று இலங்கையின் உள்ளூர் அலகுகள் பிரிக்கப்பட்டிருப்பது போல, அக்காலத்தில் இங்கு ரட்டை/தேசம், கோரளை, பற்று, ஊர் என்று நிர்வாக அலகுகள் காணப்பட்டிருந்தன. இந்தப் பிரிவுகளுக்கென சிங்களப்பகுதிகளில் ரட்டமகாத்தயா, கோரளை, அத்துகோரளை, பத்து, அத்தபத்து முதலிய பதவிகளும், தமிழ்ப்பகுதிகளில், வன்னியர், உடையார், முதலியார், போடியார் முதலிய பதவிகளும், இந்த நிர்வாக அலகுகளில் அதிகாரமிக்க பதவிகளாக விளங்கின. இன்றைய திருக்கோணமலை மாவட்டம் என்பது அப்போது திருக்கோணமலைத் தேசமாக - திருக்கோணமலைப்பற்று, கட்டுக்குளம்பற்று, கொட்டியாறுப்பற்று, தம்பலகாமம்பற்று என்னும் நான்கு பற்றுக்களின் தொகுப்பாக இருந்தது. தம்பலகாமப்பற்று இன்று தம்பலகமம், கந்தளாய், கிண்ணியா என்று மூன்று ...

பிடியன்ன மென்னடை 02

Image
பிடியன்ன மென்னடை  01 கைலாசபுராணத்தை அடுத்து உருவான கோணேசர் கல்வெட்டும், திரிகோணாசலபுராணமும் 17 - 18ஆம் நூற்றாண்டில் உருவாகி இருக்க வேண்டும். கோணேசர் கல்வெட்டில் பாட்டு வடிவிலும், எழுத்து நடையிலும் சொல்லப்படும் செய்திகளைத் தொகுத்து இலக்கிய நயத்தோடு சொல்வது திரிகோணாசல புராணம். எனவே கோணேசர் கல்வெட்டைப் பின்பற்றியே திரிகோணாசல புராணம் தோன்றியிருக்கிறது எனலாம். அவை இரண்டும் தம்பலகாமம் ஆதிகோணைநாயகர் கோவில் பற்றியும் குறிப்பிடுகின்றன. திருக்கோணேச்சரம் 1624இல் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னரே, தம்பலகாமத்தில் ஆதிகோணை நாயகர் கோவில் உருவானது. எனவே கோணேச்சரம் இடிக்கப்பட்டு ஒரு சில தசாப்தங்கள் கழிந்தே இவை பாடப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. கோணேசர் கல்வெட்டின் பத்தாம் பாடல் “வார் குலவு களப முலைப் பிடிநடையை” குளக்கோடன் வழிபட்டதைப் பாடுகிறது. திரிகோணாசல புராணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பிடியன்ன மென்னடை என்ற பெயர் வந்திருக்கிறது. அதன் கடவுள் வாழ்த்திலும் மாதுமை அம்மையின் இடத்தில் “பிடியன்ன மென்னடை” யைத் தான் காண்கிறோம். மூன்றாவது திருநகரப் படலத்தில் “மங்கையாள் பிடிய...

பிடியன்ன மென்னடை 01

Image
திருக்கோணேச்சரப் பக்கம் போயிருக்கிறீர்களா? போகாவிட்டாலும் பரவாயில்லை. அது சம்பந்தமாக கேள்வி ஒன்று. திருக்கோணமலையில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், உமையையும் என்னென்ன பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள்? கொஞ்சம் யோசித்துவிட்டு பதினோராம் ஆண்டு படித்த சமய பாடத்தை ஞாபகப்படுத்தி “மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரர்” என்று நீங்கள் பதில் சொல்லலாம். இன்னும் கொஞ்சம் பேர் இது பெரிய கஷ்டமான கேள்வியொன்றும் இல்லையே என்று புன்னகைக்கலாம். இல்லை. உங்கள் விடை பிழை. கோணேச்சரத்தில் வீற்றிருக்கும் சிவன் - உமையின் பெயரை நீங்கள் சரியாகச் சொல்லவில்லை. அதை ஒரு பக்கம் வையுங்கள். நாம் முதலில் தலைப்புக்கு வருவோம். பிடியன்ன மென்னடை. ஏதாவது புரிகிறதா? பிடி + அன்ன + மெல் + நடை. பிடி என்றால் பெண் யானை. அன்ன என்றால் ‘போல’ என்று பொருள். பெண் யானையைப் போல மென்மையாக நடப்பது அல்லது நடப்பவர் தான் பிடி அன்ன மென்னடை. ஆண்கள் கவிழ்வது பெரும்பாலும் பெண்களின் நடையில் தான். இக்காலப் பாடலாசிரியர்களே கூட “நடையா இது நடையா” என்று தான் பாடித் தீர்க்கிறார்கள். தமிழ் இலக்கியங்களும் பெண்களின் நடையை பலவாறு வருணிக்கின்றன. அ...

வெல்கம் வேரத் தேவர்

Image
அரசியல், சூழ்நிலைக் காரணங்களால், புத்தபிரான் இன்று தமிழராலும் வெறுக்கப்படுபவராக மாறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் நம் முப்பாட்டன்மாருக்கு எத்தனை நெருக்கமானவராக இருந்தார் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. அப்படியும் அதில் சிறிது ஐயமிருந்தால், நீங்கள் செல்லவேண்டிய இடம் ஒன்று இலங்கையில் இருக்கிறது. சிங்கள வரலாற்றாசிரியர்களே தமிழ்ப்பௌத்த விகாரை என்று சான்றிதழ் கொடுத்த இடம். திருக்கோணமலையின் வெல்கம் விகாரை. வெல்கம் வேரத் தேவர்   கடந்த வாரம் நண்பர்களோடு திருக்கோணமலை சுற்றுலா சென்றபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சரித்திரப்புகழ் வாய்ந்த கன்னியா வெந்நீரூற்றுக்கு வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது வெல்கம் விகாரை. சோழர் படையெடுப்பின் பின் 'ராஜராஜப்பெரும்பள்ளி'. அது தெற்கு நோக்கியதாக சதுரமான அமைப்பில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மையத்தில் சுண்ணக்கல்லாலான புத்ததேவரின் திருவுருவம் நின்ற நிலையில் காட்சியளிக்க, சுற்றி வந்து வணங்கும் வகையில் கருவறை அமைக்கப்பெற்றிருந்தது. கருவறையின் முன்பு, வலம் இடமாக இரு சி...