Posts

Showing posts with the label சிறுகதை

ஆயிரங்கால் மண்டபம் (கதை)

Image
நன்கு விடிந்திருந்தது. இரவெல்லாம் அழுது வீங்கிச் சிவந்த கண்களுடன் மனைவி வாசற்படியில் அமர்ந்திருந்தாள். உறவினர்களெல்லாம் கூடிநின்றார்கள். தூரத்தில் அவரைக் கண்டதுமே தலைவிரிகோலமாக ஓடிவந்து கட்டியணைத்து அழுதவள், தோளில் அறைந்து திட்டினாள். "ஐயோ மனுசா... எங்க கிடந்து வாறாய்.. உன்னக் காணாம எங்கெல்லாம் தேடுற...." அவள் நன்கு பயந்திருந்தாள். அவர் பெருமிதத்துடன் தொண்டையைச் செருமினார். நடந்ததெல்லாம் சொல்ல மகிழ்ச்சியோடு வாயைத் திறந்தவருக்கு அடுத்தகணம் அந்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. " இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இது என் கட்டளை" "அது.... அது ஒண்டுமில்ல... சிவலை காணாத்துப் பொயித்து. தேடிக் கொண்டு சங்கமக்கண்டிக் காட்டுக்குள போன நான் வழி மாறித்தனே..." "எண்ட தலே.. அங்கென்னத்துக்கு தனிய திரிஞ்ச நீ..... தலை தப்பின தம்புரான் புண்ணியம்..." "செரி கண்ணத் துறை.. அதான் வந்தித்தனே... எல்லாரும் பாத்து சிரிக்குதுகள் ஒள்ளம் தள்ளி நில்லு..." அவர் சிரித்தபடி தன்னை அணைத்திருந்த அவள் கைகளை விடுவித்தார். வெட்கத்துடன் நெளிந்த அவள் "செ...

மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு

Image
 படம்: ishafoundation.org “படம்பக்கா!” அழகன் கூப்பிட்டதற்கு அந்தப் பக்கம் பதிலே வரவில்லை. “அடேய் படம்பக்கா… உன்னைத் தான்!” “…………” அழகனுக்கு ஆத்திரம் வந்தது. “ சொந்தப் பெயரைக்கூட மறந்துவிட்டாயோ? உன்னைத் தான் அழைக்கிறேன் படம்பக்கா! பெயரைப் பார் படம்பக்கன் - குடம்பக்கன் என்று... ஒழுங்கான தாய் தகப்பன் இருந்தால் தானே ஒரு பெயர் வைப்பதற்கு” அழகன் முணுமுணுக்கும் போதே, அந்தப் பக்கம் குரலைச் செருமும் சத்தம் கேட்டது. “உம்!” அந்த உங்காரத்தில் தொனித்த மெல்லிய கோபம் அழகனுக்கு புரியாமல் இல்லை. “எதற்காக இந்தக் கோபம்? ஏன் என்னோடு பேச மறுக்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.. இதில் என்ன தவறு?” அழகன் சிணுங்கினான். படம்பக்கனின் குரல் கம்பீரமாக ஒலித்தது. “ஒரு பெண்ணை மணக்க விரும்புவதில் எந்த தவறும் இல்லையடா அழகா… ஆனால், ஏற்கனவே ஒருத்தியை மணந்து தவிக்கவிட்டு இங்கே இன்னொருத்தியை ஏமாற்றி மணக்க முயல்கிறாய் பார், அதுவும் என் வீட்டு வேலைக்காரியை ஏமாற்றப் பார்க்கிறாய் பார், அதுதான் தவறு!” படம்பக்கன் குரலில் தெரிவது பொய்க் கோபமா, என்ன? “நீ வேறு! ஊரில் உலகத்தில் இல்லாததையா நான் செய்யப் போ...

தந்தனத்தோம்

Image
தந்தனத்தோம் என்று சொல்லிப் பாடவந்தேன். பெரியோரே, சான்றோரே, இந்தக் கதையைக் கேளுங்கள். யாரும் அறியாமல் மறந்துவிட்ட கதை இது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தீவில் புலவரெல்லாம் பாடி, இன்று எவர் செவியிலோ நாவிலோ எஞ்சியிருக்காத அரிய பாடல் இது. அன்னையரின் பாடல். ஏழு அன்னையரின் பாடல். இதைக் கேட்பதால் உங்கள் ஏழு பிறவியும் நலன் பெறும். அன்னையரால் உலகம் ஆளப்பட்ட பழங்காலத்தில் இது  நடந்தது. பஃறுளி ஆறு பாயும் பன்மலை அடுக்கத்து உச்சியில் பேரன்னை ஒருத்தியால் ஆளப்பட்ட குமரி நாடு இருந்தது. அவள் ஆட்சியில் மண் செழித்தது. மாதர் சிறந்தனர். மழலைகள் திகழ்ந்தன. ஆனால் பகலவனையும் பால்நிலவையும் கொண்டு அவர்கள் அளந்த காலத்தில் அணுவளவு தவறு இருந்தது.  பேரன்னை மேற்குக் கடல் தாண்டி வந்த வணிகர்களிடமிருந்து திருத்திய வான் கணிப்பை தெரிந்து கொண்டாள்.  அவர்கள் விண்மீன்களைக் கொண்டு காலம் கணித்தனர். அவள் உருட்டிய சோழிகளில் எழுந்து எதிர்காலத்தை சொல்லி அச்சமூட்டின கோள்கள். கிழக்கே நாகர்கள் வாழும் பெரும் தீவில் அவளது சந்ததியர் எஞ்சவேண்டும் என்று கூறின நாள்கள்.   பேரன்னை தன் நாட்டி...