சுராங்கனிட்ட மாலு கெனாவா
இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற " சுராங்கனி " பாடலை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இலங்கையின் பொப்பிசை மன்னன் ஏ.ஈ.மனோகரனால் 1970களில் எழுதப்பட்ட இப்பாடல், இலங்கை வானொலியால் தமிழகத்திலும் களை கட்டியது. பிற்காலத்தில் இந்தி மற்றும் கொங்கணி யிலும் மொழிமாற்றப்பட்டு பட்டையைக் கிளப்பியது. சில ஆண்டுகளுக்கு முன், விஜய் அண்டனி , தினேஷ் கனகரட்ணத்தின் தயவில் மீண்டும் பரவலாக பேசப்பட்டது. இப்போது விடயம், சுராங்கனி பாட்டு அல்ல, அந்தப் பாட்டில் வரும் "சுராங்கனி"யைத் தெரியுமா? யார் அந்த சுராங்கனி? அதைப் பார்ப்பதற்கு முன் சுராங்கனி இடம்பெறுகின்ற ஒரு சிங்கள நாட்டார் கதையொன்றை நாம் பார்க்கவேண்டும். ரவிவர்மாவின் மோகினி ஓவியம் ஊஞ்சலில் அமர்ந்து சந்தோசமாக பாடல் பாடி ஆடிக்கொண்டிருந்தாள் சுராங்கனி. தூரத்தில் யாரோ தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு. "யாரது?" என்றபடியே திரும்பினாள். மரத்தின் மறைவில் இருந்து வெளியேறினான் அந்த இளைஞன். பேரழகன். அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்க...