Posts

Showing posts with the label திரையுலகம்

விருந்து

Image
போனவாரம் தான் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாயின. அந்தப் பரீட்சையை நான் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அந்தப் பரீட்சையில் மறக்கமுடியாத ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐந்து வசனம் எழுதுமாறு கோரி, வினாத்தாளில் வந்த கேள்வி "எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தபோது..." என்று ஆரம்பித்திருந்தது. நான் இப்படி எழுதினேன். 1. எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் மாலை நேரத்தில் வந்தார். 2. அவர் என் பெற்றோரைப் பார்த்து "பசி பசி" என்று அழுதார். 3. அம்மா வீட்டில் இருந்த கொஞ்ச மாவைப் பயன்படுத்தி உரொட்டி தயாரித்தார். 4. நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உரொட்டி சாப்பிட்டோம். 5. விருந்தினர் எங்களுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். வினாத்தாள் அத்தனை கடினமாக இருக்கவில்லை. பரீட்சை எழுதி முடித்ததும் பாடசாலை அதிபர் ஓடோடி வந்தார். அந்தப் பாடசாலையிலேயே அதிகம் பேர் சித்தியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி எங்களுடையது. "வசனம் எழுதுற கேள்வி என்ன தலையங்கம் வந்தது? என்ன எழுதினேல்?" என்று அதிபர் பதகளிப்புடன் கேட்டார். கூடியிருந்த என் நண்பர...

சிங்களப் பத்தினியும் கேரளப் பகவதியும்

Image
கண்ணகி ஈழத் தமிழருக்கு மட்டும் தான் தெய்வம். ஆனால் இலக்கிய மரபில் அவலச்சுவை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த துன்பியல் நாயகி அவள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவள் நிகழ்ந்த இந்தத் தமிழ் மரபு, அந்தச் சிறு இடத்தைக் கூட அவளுக்கு கொடுக்கவே இல்லை .                                              அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலைக் கலையாடல்களான சாஸ்திரீய சங்கீத இசையிலும் சரி, திரைத்துறையிலும் சரி, கண்ணகி தெய்வப்பெண்ணாக அல்லது ஒரு கைவிடப்பட்ட அகத்துறை நாயகியாக - மறைமுகமாவேனும் - பாடப்பட்ட ஒரு இடமாவது அண்மைக்காலத்தில் பதிவாகியிருக்கிறதா? உடனே எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே மூன்று திரைப்பாடல்கள்தான். ஒன்று "ஒளிமயமான எதிர்காலம்" (எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக). அடுத்தது "போறாளே பொன்னுத்தாயி" (கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே) மூன்றாவது நாக்கமுக்க. தமிழ் வெள்ளித்திரையில் கண்ணகியின் கதை வெளியாகி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் மகாபாரதம், இராமாயணம்...

கந்தன் என்னும் காதலன்

Image
திரௌபதி கேட்டாள் "மாயை உண்மையைச் சொல், பெண்பித்தனை விரும்பாத பெண் உண்டா இவ்வுலகில்?" "ஆம், அத்தனை பெண்களும் அவனைப் பார்க்கிறார்கள்.எதனால் அவனுக்கு அத்தனை பெண் என்று அகம் வினவுகிறது. அதை அறியாமல் அகம் அடங்காது. ஆகவே நாம் அவனைப் பார்க்கிறோம்." மாயை மூச்சிரைக்க "அத்துடன் இன்னொன்றும் உள்ளது. அத்தனை பெண்ணைக் கண்டவனுக்கு தான் மட்டும் மிகமிகத் தனித்தவள், அவன் வேறெங்கும் அடையமுடியாதவள் என ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள்" என்றாள்.  - வெண்முரசு 5:76 திரைப்படங்களில் கவனித்திருக்கிறீர்களா? கதாநாயகர்களுக்கு பொதுவாக இரண்டு குணாம்சங்கள் இருக்கும். முதலாவது, நாயகன் வீரதீரனாக இருப்பான். பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடுவான். மற்றது, அவன் ஒரு பெண்பித்தனாக இருப்பான். காணும் பெண்களிடமெல்லாம் வழிந்து கொண்டிருப்பான். அப்படி இல்லாவிட்டால் பெண்களெல்லாம் அவனை சுற்றிச் சுற்றி வருவார்கள்.   இதற்குக் காரணம் எளிமையானது. ஆதி காலத்திலிருந்தே மனிதனுக்கு இயல்பாகவே இருந்த இயல்புகள் வன்முறையும் காமமும். அவை இரண்டும் இருந்தால் தான் ஒரு தலைவன் உருவாக முடியும்.  ஒரு பழங்குடிச்...

என்ன கொடுமை சந்திரமுகி இது!

Image
ஒரு சராசரி தமிழ் நைண்டிஸ் கிட்டின் மறக்கமுடியாத திரைப்படங்களின் பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய இரு படங்கள் சந்திரமுகியும் அந்நியனும். அவை வெளிவந்த 2005இல்,  பதின்ம வயதின் நடுப்பகுதியைக் கடந்துகொண்டிருந்த எனக்கு, அந்தப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.   இரண்டிலுமே முதன்மைப் பாத்திரத்துக்கு ஏற்படுவது ஒரே மனநோய். பல்லாளுமைப் பிறழ்வு அல்லது பிளவாளுமைப் பிறழ்வு (Multiple Personality Disorder / Split Personality Disorder). போதாததற்கு அவை பேய், மந்திர தந்திரம், கருடபுராணம், என்று இடைக்கிடை சமயத்தையும் தொட்டுக்கொண்டிருந்தன. இரண்டிலும் என்னை அதிகம் கவர்ந்தது சந்திரமுகி தான். அப்போதெல்லாம் அம்மன், பாளையத்து அம்மன், பொட்டு அம்மன் என்று பக்திப்படங்களை பரவசமாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பேய் என்பதற்குப் பின்னே உளவியல் காரணமும் இருக்கிறது என்று சொன்ன சந்திரமுகியின் விசித்திரமான கதைக்கரு அத்தனை பிடித்திருந்தது. அருந்ததியிலிருந்து ராகவா லோரன்சின் காஞ்சனா தொடர்கள் வரை, தென்னிந்தியத் திரையுலகை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக  ஆட்டுவ...

உடுராஜமுகி

Image
ஒரு 18+ பதிவு. பிடியன்ன மென்னடை கட்டுரையில் 'உடுராஜமுகி' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2009,2010 காலத்தில் எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்த கைபேசி அழைப்போசைகளில் ஒன்று அது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து ஊர் திரும்பியிருந்த யாரோ ஒருவர் தன் மலையாள நண்பரிடமிருந்து அப்பாடலை இங்கு பரப்பியிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அதை ஏதோ பக்திப் பாடல் என்று தான் நினைத்திருந்தேன். சுப்ரபாதத்தைத் தொடரும் 'வெங்கடேச ஸ்தோத்திரம்' பாடப்படும் மெட்டின் சாயலில் அது இருந்தது முதன்மையான காரணம்.  2008இல் ஸ்டீபன் தேவஸியால் சமஸ்கிருத சுலோகங்களுக்கு இசையமைத்து வெளிவந்து கொண்டிருந்த "சாக்ரெட் சாண்ட்ஸ்' அல்பத்தின் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்ற 'தோடகாஷ்டமும்' இதே மெட்டில் இசையமைக்கப்பட்டிருந்தது இன்னொரு காரணம். 2010களில் யூடியூப்பிற்கு அறிமுகமான போது விழுந்தடித்து நான் தேடிய பாடல்களில் ஒன்றாக 'உடுராஜமுகி' இருந்தது. அப்போது தான் அது ஆபிரகாம் அண்ட் லிங்கன் எனும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதை அறிந்தேன். ஜோய் ஆலுக்காஸ் விளம்...

திரையிசை இலக்கியம்

Image
நண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது.  இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால், அவர் குறிப்பாக குறுந்தொகை வரிகளையே அதிகம் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சொன்னால், நறுமுகையே (யாயும் ஞாயும் 40), இதயம் (சிறுகோட்டுப் பெரும்பழம் 18, மந்தி உருட்டும் 38), தீண்டாய் (கன்றும் உண்ணாது 27) என்று இந்தப் பட்டியல் நீளும். சட்டென ஒரு நண்பன் ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். "தேவாவின் அரிதான, அழகான மெல்லிசை. வைரமுத்துவின் வரிகள். இதுவும் ஏதோ பழந்தமிழ்ப் பாடல் என்று தான் நினைக்கிறேன். என்னவென்று தெரியுமா?" அது கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் "சின்னச் சின்னக்கிளியே" பாடல்.                                               அவனது ஊகம் சரி தான். அது அபிராமி அந்தா...