Posts

Showing posts with the label கிழக்கிலங்கை

பின்னை எனும் நித்தியகன்னி

Image
    "கண்ணம்மா" என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? பெரும்பாலும், நீங்கள் கொஞ்சும் காதலியின் நினைப்பு வரலாம். திரை இசை இரசிகர்களுக்கு "கண்ணம்மா கண்ணம்மா அழகுப்பூஞ்சிலை"யோ, காலா "கண்ணம்மா"வோ, "கண்ணம்மா உன்ன"வோ (இஸ்பேட் ராஜா) நினைவுக்கு வரலாம். "கண்ணம்மா" என்று யூடியூப்பில் தட்டினால் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் வந்து விழுகின்றன. இன்னும் சிலருக்கு விஜய் டிவியில் ஓரிரு வாரங்களுக்கு முன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடையாய் நடந்து சிரிக்க வைத்த பாரதி கண்ணம்மா நினைவுக்கு வரலாம். எத்தனை கண்ணம்மாக்களும் வரட்டும். ஒரிஜினலுக்கு ஈடாகுமா எந்த டூப்ளிகெட்டும்? கண்ணம்மாவைப் படைத்த பாரதியின் பாடல்கள் தரும் கிறக்கத்துக்கு முன் இது எதுவுமே அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றே சொல்லவேண்டும். "நின்னையே இரதி என்று" எனக்கு மிகப்பிடித்த கண்ணம்மாப் பாடல்களில் ஒன்று. "Kannamma - Eternal Love" என்ற சைந்தவி பாடிய இசைத்தொகுதியில் தான் அதை முதன்முதலில் கேட்டேன். 1986இல் வெளியான "கண்ணே கனியமுதே" என்ற திரைப்படத்தில...

ஒரு விசுவசிப்பு

Image
                                “சுவாமி, அருட்தந்தை சிமோ டீ கோயம்பரா இங்குள்ள விருத்தாந்தங்களை தங்களுக்கு அறிவிப்பதற்காக இந்தியாவுக்கு யாத்திரைப்படும் போது இங்கு எழுந்தருளினதை தேவரீர் அறிவீர். அவர், சத்தியத்தை நோக்கி அடியேன் மனத்தை திறந்ததுடன், தங்கள் கத்தோலிக்க வேதம் பற்றியும் பிரசங்கித்தார். அடியேன் ஜீவனை இரட்சிக்கவும், போர்த்துக்கேய சக்கரவர்த்திகளுக்கு அன்யோன்யச் சிற்றரசாக மாறவும் நீண்ட நாட்களாக வெகு விருப்பமாயிருக்கிறேன். இப்போது யான் மனதளவில் சத்திய கிறிஸ்தியானி என்றாலும், ஞானஸ்நானத்துக்கான முழுக்காட்டு தீர்த்தத்தைப் பெறாததனால் மிக வருத்தமுற்றவனாயிருக்கிறேன். யான் இன்னும் கிறிஸ்தியானியாகவில்லை என்றால், அது தமியேனின் அபிலாஷையால் அல்ல சுவாமி; தேசத்தின் நிலைமையை அறியவொண்ணாததினாலேயே. எதுவாகினும் சுவாமி, அடியேனின் இராச்சியத்துக்கான வாரிசான என்னுடைய குமாரன், சத்திய வேதத்தைத் தழுவி, தொம் லூயிஸ் என்ற நாமத்தையும் பெற்றிருக்கிறான். நான் என் எல்லா இனசனங்களோடும், என்னால் ஆளப்படுகின்ற எல்லா மக்களோட...

ஹம்ச கமனா

Image
தம்பலகாமம் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். பிறந்தகத்தின் பெயரை ஒத்திருப்பதாலோ என்னவோ அவ்வூர் மீது எனக்கு நெடுநாளாகவே ஈர்ப்பு உண்டு. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அது திருக்கோணமலையின் நான்கு பற்றுக்களில் ஒன்றின் தலைநகராக இருந்தது. பற்று என்பது பழங்கால இலங்கையின் ஒரு நிர்வாக அலகு. இன்று மாகாணம், மாவட்டம், பிரதேசம், கிராம சேவகர் பிரிவு என்று இலங்கையின் உள்ளூர் அலகுகள் பிரிக்கப்பட்டிருப்பது போல, அக்காலத்தில் இங்கு ரட்டை/தேசம், கோரளை, பற்று, ஊர் என்று நிர்வாக அலகுகள் காணப்பட்டிருந்தன. இந்தப் பிரிவுகளுக்கென சிங்களப்பகுதிகளில் ரட்டமகாத்தயா, கோரளை, அத்துகோரளை, பத்து, அத்தபத்து முதலிய பதவிகளும், தமிழ்ப்பகுதிகளில், வன்னியர், உடையார், முதலியார், போடியார் முதலிய பதவிகளும், இந்த நிர்வாக அலகுகளில் அதிகாரமிக்க பதவிகளாக விளங்கின. இன்றைய திருக்கோணமலை மாவட்டம் என்பது அப்போது திருக்கோணமலைத் தேசமாக - திருக்கோணமலைப்பற்று, கட்டுக்குளம்பற்று, கொட்டியாறுப்பற்று, தம்பலகாமம்பற்று என்னும் நான்கு பற்றுக்களின் தொகுப்பாக இருந்தது. தம்பலகாமப்பற்று இன்று தம்பலகமம், கந்தளாய், கிண்ணியா என்று மூன்று ...

கிழக்கிலங்கை - ஒரு சூம் உரையாடல்

Image
கடந்த யூலை 19ஆம் திகதி அரங்கம் பத்திரிகையும் Tamil Institute for Leadership excellence அமைப்பும் இணைந்து நடாத்திய சூம் கலந்துரையாடலின் யூடியூப் இணைப்பு இணைக்கப்பட்டிருக்கிறது. "ஐரோப்பியர் வருகையின் பின்னர் கிழக்கிலங்கை வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினேன் (50:00 - 1:05:00). திரு.ராஜ்குமார் அவர்கள் ஒருங்கிணைக்க, திரு.சீவகன் பூபாலரட்ணம் ஐயா அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். சூம் உரையாடல் முழுவதிலும் தொகுப்புரை செய்து கலந்துரையாடலைச் சீராகக் கொண்டு சென்றவர் பேராசிரியர் மௌனகுரு ஐயா அவர்கள்.  உண்மையில் கிழக்கிலங்கை பற்றிய தோராயமான அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த முழுமையான உரையாடல் போதுமானது. "கிழக்கிலங்கை பூர்வீக வரலாறும் பண்பாடும்" என்ற தலைப்பிலான திரு விஜயரட்ணா எட்வின் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கையின் தமிழ் சமூக உருவாக்கமும் பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப்பிலான கலாநிதி சுந்தரம்பிள்ளை சிவரட்ணம் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் உருவாக்கமும் இஸ்லாமிய பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப...

பெரியசாமியின் கப்பல்

Image
பாற்சேனை பெரியசாமி கோவில்   "பெரிய சாமி கோவில் நாளையோடு முடிகிறது. போகிறேன். வரப்போகிறீர்களா?" போன கிழமை, அலுவலகத்தில் பணி முடிந்து கிளம்புகையில் நண்பர் ஒருவர் வந்து இப்படி சொன்னதும் நான் வியப்படைந்தேன். "பெரியசாமியா? அது யார்?" "பெரியசாமி தெரியாதா? அந்தக்கோவில் பாற்சேனையில் இருக்கிறது. இப்போது திருவிழா. கொரோனாவால் இந்த முறை சிறப்பாக இருக்காது. ஆனால் சும்மா போய் வரலாம். வருவதென்றால் வாருங்கள்." பெரியசாமி, பாற்சேனை முதலிய பெயர்கள் விந்தையாகவும் ஆர்வமூட்டுவனவாகவும் இருந்தன. கரும்பு தின்னக் கைக்கூலியா? மறுவார்த்தை பேசாமல் புறப்பட்டுவிட்டேன். திருக்கோணமலை மாவட்டத்தின் தெற்கே பாயும் வெருகல் கங்கையுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஆரம்பிக்கிறது. அங்குள்ள எல்லைக் கிராமம் கதிரவெளி. கதிரவெளிக்குத் தெற்கே மூன்று கிமீ பயணித்தால் பாற்சேனை கிராமம். பழைமை வாய்ந்த ஊர்களில் ஒன்று தான். அங்கு கடலோரமாக அமைந்திருக்கிறது பெரியசாமி கோவில். கோவில் ஆரவாரமாகத் தான் இருந்தது. சூழ்நிலை நல்லபடி இருந்திருந்தால் கூட்டம் இன்னும் அதிகம் என்பது தெரிந்தது. கோவில் அண்மையில் ஆகமவிதிப்படி புதுக்...

கண்ணகியும் கீழைக்கரைத் தேசியமும்

Image
"கீழைக்கரை" என்று அடிக்கடி நான் குறிப்பிடுவது, மரபுகளிலும், பண்பாட்டிலும் ஒத்த தன்மையைக் காண்பிக்கின்ற கொட்டியாறுக் குடாவிலிருந்து அறுகங்குடா வரையான இலங்கையின் கிழக்குக்கரையோரப் பட்டியில் (Coastal Belt) காணப்படும் தமிழ் ஊர்களை. இந்த எல்லையின் பெரும்பகுதியை உள்ளடக்குகின்ற, இன்னும் நெருக்கமான பண்பாட்டொருமையைக் காண்பிக்கின்ற பிராந்தியத்தை தான் மட்டக்களப்புத் தேசம் என்கிறார்கள். இப்படிச் சொல்வதால், இந்த "கீழைக்கரை" என்ற வரையறை புதியது என்று அர்த்தமில்லை. அந்தப் பண்பாட்டொருமை ஏற்கனவே பல மானுடவியலாளர்களால் தெளிவாக இனங்காணப்பட்டிருக்கிறது. மட்டக்களப்புத் தேசம் என்ற வரைவிலக்கணத்தை விடப் பரந்த அர்த்தத்தில் மார்க் விட்டாகர் (Mark P Whitaker), டெனிஸ் மக்கில்வ்ரே (Dennis B. McGilvray) முதலிய மானுடவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளில் கீழைக்கரை (East Coast) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் வியப்பு என்னவென்றால், கரையோரப்பட்டியில் நெடுக்குவாக்காக மூன்று மாவட்டங்களை ஊடறுத்து சுமார் 225 கிமீ தூரம் நீளும் பிராந்தியத்தில் நம்மால் அவதானிக்க முடியும் பண்பாட்டு ஒருமை, வெறும...

கண்ணகியாள் குளிர்ந்தாடும் கவின்பதியாம் தண்பொழிலூர்

Image
சித்திரை வருடப்பிறப்பு பிறந்தால் கிழக்கிலங்கை ஊர்களில் ஒருவரை ஒருவர் காணும் போது சுகவிசாரிப்புகளுக்குப் பின்னர் பொதுவாக இரு கேள்விகள் வழக்கமானவை. "எப்பயாம் கதிர்காமக் கொடியேத்தம்?" என்பது ஒன்று. "எப்பயாம் கதவு திறக்குது?" என்பது அடுத்தது. கதவு திறப்பது என்பது, தன் ஊரில் அல்லது அடுத்துள்ள ஊரில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சடங்கு ஆரம்பமாவதைக் குறிக்கும். மற்றைய நாள்களிலெல்லாம் பூட்டப்பட்டிருக்கும் கண்ணகி கோவில்கள் இந்தக் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தான், குளிர்த்திச் சடங்கு ஆரம்பமாவதை "கதவு திறத்தல்" என்று சொல்கிறார்கள். ஆலய கிழக்கு நுழைவாயில் ஏனென்றால் கிழக்கிலங்கையில் வைகாசி மாதம் என்பது கண்ணகிக்குரியது. அங்கு அமைந்துள்ள பழம்பெரும் கண்ணகி ஆலயங்களில் எல்லாம் இப்படி "திருக்குளிர்த்திச் சடங்கு" என்று ஆதுரமாக அழைக்கப்படும் கண்ணகி விழா ஆரம்பமாகும்.  அங்குள்ள கண்ணகி கோவில்களில் பழமை வாய்ந்ததும் புகழ்மிக்கதுமான கோவில் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கிழக்கில் கண்ணகிக்காக அமைந்த முதற்கோவில் இத...