Posts

Showing posts with the label கூத்து

கூத்த யாத்திரை: இலங்கைக் கூத்துக்கலையின் குறுக்குவெட்டுப் பார்வை

Image
கூத்து, இலங்கைத்தமிழரின்  ஆடற்கலைகளில் ஒன்று. கூத்துக்கலையில் செவ்வியல் கூறுகள்  இனங்காணப்பட்டிருப்பதால், அதை நாட்டார் கலை என்று மட்டும் முத்திரை குத்த இயலாது என்ற கருத்து தற்போது ஈழத்து ஆய்வுலகில் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலனாக,  சுமார் பத்தாண்டுகளாக  கூத்து தொடர்பாக என்னை அரித்துக்கொண்டிருக்கும் வினாக்கள் இரண்டு. இன்றுவரை, இலங்கையில் தமிழர் தேசிய நடனம் என்றால், பரதநாட்டியமே முன்வைக்கப்படுகிறதே, கூத்துக்கு அந்த இடம் ஏன் வழங்கப்படவில்லை?   என்பது முதலாவது வினா. இரண்டாவது வினா, அப்படி தமிழர் தேசிய நடனமாகக் கூத்துக்கு இடம் கொடுப்பதென்றால், கூத்தில் ஊருக்கு ஊர், இடத்துக்கிடம் ஆட்டமுறைகளில் வேறுபாடு நிலவுகையில், அதில் எதை சரியான வடிவமாகக் கருதி, அரங்காற்றுகைக்கென அங்கீகரிப்பது?

கூத்து என்னும் மக்கள் கலை

Image
விநாயகபுரம் சிவன் கோவில் முன்றல் கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் திகதி. ஒரு தொலைபேசி அழைப்பு. "அண்ணா, வாற சனிக்கிழமை வினாயகபுரம் சிவன் கோவிலடில கூத்து வச்சிருக்கம். உங்கள அதிதியா போட்டிருக்கிறன். வருவிங்க தானே" என்று தொலைபேசியில் சொன்னவர் தங்கை விலோஜினி. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவி. சில மாதங்களுக்கு முன்பு தான் சந்தித்து தனது ஆய்வுத்தலைப்பு திருக்கோவில் பிரதேச கூத்துக்கலையை மையமாகக் கொண்டது என்பதைக் கூறி, அது தொடர்பான ஓரிரு வாய்மொழி வரலாறுகளை சேகரித்துச் சென்றிருந்தார். திருக்கோவில் பிரதேசம் பழைய மட்டக்களப்புத் தேசத்தின் பண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த தொட்டில். அங்கு நீடிக்கின்ற கலைக்கும் நீண்ட வரலாறு உண்டு. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில், காலனித்துவ காலம் வரை ஆடல் பெண்கள் பணியாற்றிய தகவல் கிடைக்கிறது. அக்கோவிலின் நிர்வாகத்தில் முதன்மை இடம்பிடிக்கும் சமூகப்பிரிவொன்று தனது பட்டமாக "நட்டுமுட்டு நாடகசாலை கொண்ட கோத்திரம்" என்பதைச் சொல்லி வந்திருக்கிறது. நட்டுமுட்டு என்றால் மேளதாளம். திருக்கோவிலின் வரலாற்று பூர்வமான தோற்...