Posts

Showing posts with the label தம்பிலுவில்

மரபு : எஞ்சியிருப்பதைத் தக்க வைத்தல்.

Image
நிறையத்தடவை எழுதி அழித்துவிட்டுப் பதிவு செய்கிறேன். இதை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் இதை வாசிக்கும் பெரும்பாலானோரை இந்தப்பதிவு மகிழ்ச்சிப்படுத்தப் போவதில்லை என்பதை அறிவேன். அப்படி இருந்தும் எழுதுவதற்கான காரணம் மூன்று. முதலாவது, இந்தச் சம்பவம் ஒரே ஒரு ஊரில் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருப்பது. இரண்டாவது, முழு தமிழ்க் கூட்டு மனமுமே இதை சரியென அங்கீகரிக்கின்றது. இதில் தவறேதும் இருப்பதாக அது எண்ணவில்லை. அந்த அபத்தத்தை யாராவது சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். மூன்றாவது நடந்தது நடந்தது தான். எதிர்காலத்திலாவது கொஞ்சம் இருப்பவற்றை காத்துக்கொள்ள மாட்டோமா என்ற நப்பாசை. சரி. என்ன தான் பிரச்சினை? தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு இடம்பெற்று இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஆம், அதனால் என்ன? கோவில்களில் திருப்பணிகள் இடம்பெறும்போது இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். முதலாவது, கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பில் பழைமை மாறுமளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை. இரண்டாவது, கோவிலின் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...

பிறந்தகத்தை ஆவணப்படுத்தல்

Image
பிறந்த மண்ணை பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற ஆசை எப்போதிருந்தோ இருக்கிறது. ஆனால் அந்நூல் தகவல் தொகுப்பில் முழுமையானதாக, ஏனைய ஊர் வரலாற்று நூல்களுக்கு முன்மாதிரியானதாக அமைய வேண்டும் என்பதில் கூடிய சிரத்தை எடுப்பதால் தள்ளிக்கொண்டே போகிறது. மூன்றாண்டுகளுக்கு முன், நூலகம் நிறுவனத்தின் 'ஊர் ஆவணப்படுத்தல்' செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டபோது, நூலின் உள்ளடக்கத்துக்கான ஒரு வரைவை தயாரித்துக்கொள்ள முடிந்தது. எனினும் தகவல் சேகரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் செயற்றிட்டத்தில் முழுப்பங்களிப்பை அளிக்க முடியவில்லை. (அந்த வரைவை ஆவணகம் வலைத்தளத்தில் இங்கு படிக்கலாம்.) எனினும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்யலாம் என தீர்மானித்தேன். எனது தகவல் சேகரத்தின் ஒரு பகுதியை தம்பியொருவனின் பாடசாலை ஆண்டு மலருக்கு வழங்கினேன். அதைத் திருத்தி இன்னும் சில விடயங்களை சேர்த்து, மறைந்த சகோதரர் அமரர். கோவேந்தன் அண்ணாவின் நினைவு வெளியீடான ' கோவேந்த வியாசத்துக்கு ' வழங்கினேன். எதிர்பார்த்தது போலவே அக்கட்டுரை ஊரில் சலசலப்பை உண்டாக்கியது. குறிப்பாக அக்கட்டுரையில் அப்பட்டமாக எழுதப்பட்டிருந்த ஊரின் சமூக அடுக்கு ச...

கண்ணகியும் கீழைக்கரைத் தேசியமும்

Image
"கீழைக்கரை" என்று அடிக்கடி நான் குறிப்பிடுவது, மரபுகளிலும், பண்பாட்டிலும் ஒத்த தன்மையைக் காண்பிக்கின்ற கொட்டியாறுக் குடாவிலிருந்து அறுகங்குடா வரையான இலங்கையின் கிழக்குக்கரையோரப் பட்டியில் (Coastal Belt) காணப்படும் தமிழ் ஊர்களை. இந்த எல்லையின் பெரும்பகுதியை உள்ளடக்குகின்ற, இன்னும் நெருக்கமான பண்பாட்டொருமையைக் காண்பிக்கின்ற பிராந்தியத்தை தான் மட்டக்களப்புத் தேசம் என்கிறார்கள். இப்படிச் சொல்வதால், இந்த "கீழைக்கரை" என்ற வரையறை புதியது என்று அர்த்தமில்லை. அந்தப் பண்பாட்டொருமை ஏற்கனவே பல மானுடவியலாளர்களால் தெளிவாக இனங்காணப்பட்டிருக்கிறது. மட்டக்களப்புத் தேசம் என்ற வரைவிலக்கணத்தை விடப் பரந்த அர்த்தத்தில் மார்க் விட்டாகர் (Mark P Whitaker), டெனிஸ் மக்கில்வ்ரே (Dennis B. McGilvray) முதலிய மானுடவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளில் கீழைக்கரை (East Coast) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் வியப்பு என்னவென்றால், கரையோரப்பட்டியில் நெடுக்குவாக்காக மூன்று மாவட்டங்களை ஊடறுத்து சுமார் 225 கிமீ தூரம் நீளும் பிராந்தியத்தில் நம்மால் அவதானிக்க முடியும் பண்பாட்டு ஒருமை, வெறும...

கண்ணகியாள் குளிர்ந்தாடும் கவின்பதியாம் தண்பொழிலூர்

Image
சித்திரை வருடப்பிறப்பு பிறந்தால் கிழக்கிலங்கை ஊர்களில் ஒருவரை ஒருவர் காணும் போது சுகவிசாரிப்புகளுக்குப் பின்னர் பொதுவாக இரு கேள்விகள் வழக்கமானவை. "எப்பயாம் கதிர்காமக் கொடியேத்தம்?" என்பது ஒன்று. "எப்பயாம் கதவு திறக்குது?" என்பது அடுத்தது. கதவு திறப்பது என்பது, தன் ஊரில் அல்லது அடுத்துள்ள ஊரில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சடங்கு ஆரம்பமாவதைக் குறிக்கும். மற்றைய நாள்களிலெல்லாம் பூட்டப்பட்டிருக்கும் கண்ணகி கோவில்கள் இந்தக் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தான், குளிர்த்திச் சடங்கு ஆரம்பமாவதை "கதவு திறத்தல்" என்று சொல்கிறார்கள். ஆலய கிழக்கு நுழைவாயில் ஏனென்றால் கிழக்கிலங்கையில் வைகாசி மாதம் என்பது கண்ணகிக்குரியது. அங்கு அமைந்துள்ள பழம்பெரும் கண்ணகி ஆலயங்களில் எல்லாம் இப்படி "திருக்குளிர்த்திச் சடங்கு" என்று ஆதுரமாக அழைக்கப்படும் கண்ணகி விழா ஆரம்பமாகும்.  அங்குள்ள கண்ணகி கோவில்களில் பழமை வாய்ந்ததும் புகழ்மிக்கதுமான கோவில் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கிழக்கில் கண்ணகிக்காக அமைந்த முதற்கோவில் இத...

எவனோ ஒருவன் கை அம்பு

Image
நான் இன்றும் ஆத்திகன் தான். நமக்கு மேல் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணுபவன். ஆனால், தொல்லியல், வரலாறு, இலக்கியம் என்பனவற்றில் எல்லாம் ஆர்வம் ஏற்பட்ட பின்னர், கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே சொல்வேன். அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நிலை. ஆனால் எப்போதாவது திடுக்குறச் செய்யும் ஏதாவது அனுபவங்கள் ஏற்படுவது வழமை. இன்று ஏற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்று தான். ' தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு ' கட்டுரையைப் படித்திருப்பீர்கள். உண்மையில், அது தொடர்பாக போன ஆண்டே ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் '2020இல் தானே சரியாக 500 ஆண்டுகள் ஆகின்றது. எனவே அடுத்த ஆண்டு எழுதுவோம்' என்று விட்டுவிட்டேன் ஆனால் இந்தமுறை இணையத்தில் தேடியபோது குறிப்புக்கள் ஆறாம் விஜயபாகுவின் ஆட்சி ஆரம்பிக்கும் ஆண்டாக 1507, 1509, 1513 என்று தான் காட்டிக்கொண்டு இருந்தன. 1509, 1513 என்று குறிப்பிட்ட சான்றுகள் அனேகம். எதைக் கருத்தில் எடுத்தாலும் சரியாக 500 ஆண்டுகள் வரமுடியாது. ஆனால் 2020இல் ஐநூறாம் ஆண்டு வருவதாக நினைத்தல்லவா போன ஆண்டு எழுதுவதைத் தவிர்த்தோம்? அப்படி...