Posts

Showing posts with the label தவ்வை

விகடனும் தவ்வையும்

Image
தமிழரும் தவ்வை வழிபாடும் அன்னை தவ்வை,  காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பம். "புலமைச்சொத்து" (Intellectual Property) பற்றிய அறிமுகமோ, விழிப்புணர்வோ நம் சமூகத்தில் அவ்வளவாக இல்லை. அதுவும் சமகால சமூக வலைத்தள யுகத்தில் "லைக் வாங்குவது, பெயர் வாங்குவது" என்பது ஒரு மனநோயாகிவிட்ட நிலையில், யாரோ ஒருவன் மணிக்கணக்கில் குந்தியிருந்து தன் பொழுதைச் செலவழித்து எழுதித்தள்ளும் ஏதோ ஒன்றை, "நன்றி:இன்னார்" என்று கூடக் குறிப்பிடாமல் இலகுவாகக் "கொப்பி - பேஸ்ட்" செய்து, எத்தனை விருப்பங்கள் வந்திருக்கின்றது என்று பார்க்கும் பேர்வழிகளே அதிகம். அது புலமைத்திருட்டு என்ற குற்றவுணர்வோ, யாரோ ஒருவன் உழைப்பை உறிஞ்சி உண்பதற்குச் சமன் என்ற மனக்கிலேசமோ அத்தகைய யாருக்குமே இருப்பதில்லை. இப்படி "வெட்டி -ஒட்டி" லைக்கை எண்ணுவது, பெயர் தேடுவது ஒருவகைப் புலமைத்திருட்டு என்றால், ஒரு ஆக்கமொன்றை வரிக்கு வரி நுணுகிப் படித்து, சொற்களை மட்டும் முன்பின் மாற்றி இன்னொரு ஆக்கமொன்றை படைப்பது மிகநுண்மையான புலமைத்திருட்டு. விகடனின்  இந்தக்  கட்டுரையிலுள்ள ஒவ்வொரு பந்...

தமிழரும் தவ்வை வழிபாடும் - ஓர் அலசல்

Image
தலைப்பைப் படித்ததும் வாசகர் பலரது புருவங்கள் நெளியலாம். தவ்வையா? புதிதாக இருக்கின்றதே...அப்படியென்றால்; என்ன என்று அறியும் ஆவலில், அகராதிகள் மீது கண்கள் ஓடினால், அங்கு தமக்கை, அன்னை போன்ற அரும்பதங்கள் மட்டுமன்றி இன்னொரு பொருளையும் அவதானிக்கலாம். ஆம்! அதேதான்! அப்பெயரைத் தலைப்பிலிட்டு, கட்டுரையை அமங்கலகரமாக ஆரம்பிக்க விரும்பாமலேயே, கட்டுரையாளன் தவ்வை என்ற பெயரை இங்கு பயன்படுத்த முனைகிறான்.  இந்நாட்களில் மூதேவி என்பது ஒரு வசைமொழி. அமங்கலத்தின் தேவதையாகவே அவள் பிரபலம். அத்துமீறிய குறும்புகளையும், வன்முறைகளையும் அவள் பெயராலேயே 'சேட்டை' என்றும் 'சேஷ்டை' என்றும் இகழ்கிறோம். ஆனால், தவ்வை வழிபாடு ஒருகாலத்தில் தமிழர் மத்தியில் எத்தகைய இடத்தைப் பெற்றிருக்கிறது என்று ஆராயும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. தவ்வை, கேட்டை, சேட்டை, மாமுகடி, கெடலணங்கு போன்ற பல பெயர்களால் போற்றிப் புகழப்படும் (?!) அளவுக்கு, சிறப்புவாய்ந்த ஒரு தொன்றமிழ்த் தெய்வமாக மூதேவி இருந்திருக்கிறாள் என்ற செய்தி நமக்கு ஆச்சரியத்தைத் தரலாம். தமிழரின் தொன்மை வழிபாடு இயற்கையைச் சார்ந்தது. மரங்களை 'க...