Posts

Showing posts with the label பாரதியார்

பின்னை எனும் நித்தியகன்னி

Image
    "கண்ணம்மா" என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? பெரும்பாலும், நீங்கள் கொஞ்சும் காதலியின் நினைப்பு வரலாம். திரை இசை இரசிகர்களுக்கு "கண்ணம்மா கண்ணம்மா அழகுப்பூஞ்சிலை"யோ, காலா "கண்ணம்மா"வோ, "கண்ணம்மா உன்ன"வோ (இஸ்பேட் ராஜா) நினைவுக்கு வரலாம். "கண்ணம்மா" என்று யூடியூப்பில் தட்டினால் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் வந்து விழுகின்றன. இன்னும் சிலருக்கு விஜய் டிவியில் ஓரிரு வாரங்களுக்கு முன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடையாய் நடந்து சிரிக்க வைத்த பாரதி கண்ணம்மா நினைவுக்கு வரலாம். எத்தனை கண்ணம்மாக்களும் வரட்டும். ஒரிஜினலுக்கு ஈடாகுமா எந்த டூப்ளிகெட்டும்? கண்ணம்மாவைப் படைத்த பாரதியின் பாடல்கள் தரும் கிறக்கத்துக்கு முன் இது எதுவுமே அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றே சொல்லவேண்டும். "நின்னையே இரதி என்று" எனக்கு மிகப்பிடித்த கண்ணம்மாப் பாடல்களில் ஒன்று. "Kannamma - Eternal Love" என்ற சைந்தவி பாடிய இசைத்தொகுதியில் தான் அதை முதன்முதலில் கேட்டேன். 1986இல் வெளியான "கண்ணே கனியமுதே" என்ற திரைப்படத்தில...

பாயும் ஒளி நீ எனக்கு!

Image
ரட்சகன் ஸ்ரீதரின் 'பாயும் ஒளி' ரட்சகன் ஸ்ரீதர் என்பவர் பாடிய பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு" பாடலை அண்மையில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். பாடல் அருமையாகத் தான் இருக்கிறது. ஆனால் முன்பும்  இந்தப்  பாடல் நிறைய வடிவங்களில் வந்திருக்கின்றது. அவற்றில் சிறந்ததாக நான் கருதுவது  சைந்தவியின் "பாயும் ஒளி". அது 2013இல்   நிவாஸ் கே பிரசன்னாவின்  " Kannamma - Eternal Love " எனும் இசைத்தொகுதியி ல் வெளியானது. அதன் பெரும்பாலான பாடல்கள் இப்போதும் என் கைபேசியை ஆக்கிரமித்திருப்பவை. குறிப்பாக இந்த "பாயுமொளி", "நின்னையே இரதி என்று", " தூண்டில் புழுவினைப் போல் " மூன்றும். சைந்தவியின் பாயும் ஒளி. பாரதியின் பாடல்களில்,  அருமையான ஒன்று இந்தப்"பாயுமொளி நீ எனக்கு". அதில் தொனிப்பது, நாயகியை நினைத்து நாயகன் கொள்ளும் அளவற்ற பெருமிதம். உண்மையிலேயே அவள் மீது அவனுக்கு அத்தனை அன்பு இருக்கிறதோ - இல்லையோ, அந்த அன்பும் உண்மையோ - பொய்யோ, "நீ இல்லாமல் நான் இல்லை" என்பதை  உவமைகளால் நிரப்பி கொஞ்சம் ஓவராகவே செல்லும...