Posts

Showing posts from 2018

ஆழ்ந்த இரங்கல்கள், RIP!

Image
பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்துச் சொன்னால், அதற்கு 'நன்றி' என்று பதில் சொல்லாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  நான் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே நடந்துகொண்டிருக்கிறேன்.  அதற்குக் காரணம்  இருக்கிறது. நான் நன்றி சொல்லாமல் கடந்து செல்கின்ற பிறந்தநாள் வாழ்த்து இது தான். "hbd" பிறந்தநாள் ஒவ்வொன்றும் நாம் கடந்த பாதையையும் கடக்கப் போகும் பாதையையும் நினைவுறுத்தும் மைல்கற்கள் என்பதாலேயே முக்கியம் பெறுகின்றன. அதில் உண்மையான அன்புடனும், மனம் நிறைந்த கனிவுடனும் வாழ்த்தும் ஆசியும் தெரிவிப்போர் என்றென்றும் நம் நன்றிக்குரியவர்கள் தான். நான்கைந்து நாள் கடந்து சென்ற பின்னாலும், பேஸ்புக்கிலோ கைபேசியிலோ வாழ்த்துச் சொன்ன யாரையுமே தவறவிடாமல் நன்றி சொல்வதே என் வழக்கம். உண்மையைச் சொல்லப்போனால், பேஸ்புக்கில் பிறந்தநாள் தென்படுவதை முடக்கி வைத்திருப்பதே வாழ்த்துவோர் எண்ணிக்கை அதிகரித்து யாரும் தவறவிடப்படக் கூடாதே என்ற அச்சத்தால் தான்.  ஆக, இந்த 'HBD' பேர்வழிகளைப் பொறுத்தவரை, 'கடமைக்கு ஒரு வாழ்த்து தெரிவித்து விட வேண்டும்', அவ்வளவு தான். நம் பிறந்தநாளுக்காக ...

குடைந்தாடாய் திருத்தும்பீ! திருவெம்பாவை இன்பம்

Image
கணினியிலோ கைபேசியிலோ, எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள் என்று ஒரு பாடல்கள் பட்டியல் நம் எல்லோருக்கும் இருக்கும். என் அந்தப் பட்டியலில் உள்ள ஒரு பாடல், ஈராண்டுகளுக்கு முன் வெளிவந்த றெக்க திரைப்படத்தின் "கண்ணம்மா கண்ணம்மா" பாடல். ஆனால், கேட்கும் போதெல்லாம், இமானின் இசையை விட, அதில் வருகின்ற பாரதியின் காதலி "கண்ணம்மா"வை விட, அந்தப் பெண் குரல் என்னவோ செய்யும். மிக நெருக்கமாகப் பழகி மறந்த யாரையோ நினைவுகூரச் சொல்கின்ற இனிய குரல். கூகிளில் தேடிய போது அது "நந்தினி ஸ்ரீகர்" என்று அறிந்தேன்.  முன்பெல்லாம் வானொலிகளில் பாடல் ஒலிபரப்பானால்,  அந்தப் பாடலை இசையமைத்தவர் யார், பாடியவர் யார், எழுதியவர் யார் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி வானொலியில் பல தடவை சொல்லிச் சொல்லி மனப்பாடமான பெயர் அது. நந்தினி ஸ்ரீகர். பள்ளிப்பருவத்து மறக்கமுடியாத பாடல்களில் ஒன்றான " நறும்பூக்கள் தேடும் திருத்தும்பியே " (திரைப்படம்: உற்சாகம்) பாடலைப் பாடியவர். அந்தப் பாடல், அந்தச் சிறுவயதிலேயே பிடித்துப்போனதற்கு காரணங்கள் இரண்டு. அவற்றில் முதலாவது, அதன் தூய தமிழ...

அறுகம்பைக் கடலோரம் - ஒரு இடப்பெயர் ஆய்வு

Image
கிழக்கிலங்கை என்றதும் இரு சுற்றுலாத்தலங்கள் தவறாமல் நினைவுக்கு வரும். ஒன்று, பாசிக்குடா இன்னொன்று அறுகம்பே.  நாம் இப்போது வந்திருப்பது அறுகம்பேக் கடலோரம்.  என்ன முழிக்கிறீர்கள்? சீசன் இல்லாத காலத்தில் ஏன் நாம் அறுகம்பைக்கு வரவேண்டும் என்றா? ஹலோ, நாம் இங்கு வந்திருப்பது, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை புதினம் பார்த்து வாய் பிளக்கவோ, கடலில் குதித்து குளித்து மகிழவோ இல்லை. இந்த இடத்தின் பெயரை ஆய்வு செய்ய. கவனம் அலைகளில் கால் படாமல் தள்ளி நின்றுகொண்டே சொல்வதைக் கேளுங்கள்.  “அறுகம் மட்டக்களப்புக்குக் கிழக்குப்புறம் 64 மைல் தொலைவிலுள்ள ஒரு கிராமம். அதேபெயரிலுள்ள ஒரு குடாவின் கரையில் அது அமைந்திருக்கிறது. அங்கு  களியாலான சிறுகோட்டையொன்று இடச்சுக்களால் ஒருமுறை இராணுவ முகாமாகப் பயன்பட்டது. தற்போது அங்கு நெல் சேமிக்கப்படும் ஒரு களஞ்சிய அறை உள்ளது" என்று 1834இல் எழுதுகிறார் சைமன் காசிச்செட்டி.  யாரிந்த சைமன் காசிச்செட்டி? இலங்கையின் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் சைமன் காசிச் செட்டி. புத்தளம் கற்பிட்டியில் பிறந்த இவர், இலங்கையின் ...

அலகிலா ஆடல் நூல் விமர்சனம் | நடேசபிள்ளை சிவேந்திரன்

Image
அலகிலா ஆடல் வாங்க:  இலங்கை - பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு. தமிழகம் - மெரீனா புக்ஸ் எழுத்தாளர் வி.துலாஞ்சனனால் எழுதப்பட்ட “அலகிலா ஆடல்:சைவத்தின் கதை” என்ற நூல், இலங்கை சைவநெறிக்கழகத்தால் அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சைவத்தின் கதை என்று உப தலைப்பு அளிக்கப்பட்டிருக்கும் இந்நூல் பழங்குடிகளின் தெய்வமாக இருந்து பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி தனி ஒரு பெருந்தெய்வமாகி சிவம் என்று தத்துவத்தளத்தில் விரியும் பரம்பொருளின் கதையைக் கூறுகிறது என்று சொன்னால் அது, மிகமிக எளிமைப்படுத்தப்பட்ட கூற்றாகவே இருக்கும். பெயரே சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த “அலகிலா ஆடல்” எவ்வகையான நூல்? சொல்லப்போனால் இது சைவ நம்பிக்கை சார்ந்த சமய நூல் அல்ல. சைவத்தை புறவயமாக வரலாற்றுப் போக்கில் அள்ள முனையும் நூல். மிகப்பெரும் காட்டினுள் அதனூடாக ஓடும் ஆறொன்றின் கரையோரமாக உள் நுழையும் அனுபவத்தையே இந்த நூல் தருகின்றது. பயணத்தில் ஒவ்வொரு மரமாக, செடி, கொடியாக, பறவைகள், விலங்குகளாக, ஒன்றையும் விட்டுவிடப் போவதில்லை என்று அறிமுகப்படுத்திச் செல்கிறார் நூலாசிரியர்...

சைவநெறிக் கழகத்தின் இரு நூல் வெளியீட்டு விழா

Image
இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் வெளியீட்டு விழா, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 2018 ஒக்டோபர் 20 (சனிக்கிழமை) கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது. இதில் சைவப்புலவர் திரு ந.சிவபாலகணேசன் எழுதிய "சிவப்பிரகாசக் கதவம்", கழகப் பொதுச் செயலாளர் திரு வி.துலாஞ்சனன் எழுதிய "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன.  யாழ். பல்கலை வேந்தர் பேரா.சி.பத்மநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். விழா அரங்கில் விருந்தினர்கள் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி. திருமதி. சாந்தி கேசவன் "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு அறிமுகவுரை ஆற்றுகிறார். யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர், சைவப்புலவர் திரு.சி.ரமணராஜா "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலுக்கு நயவுரை ஆற்றுகிறார் சித்தாந்தரத்தினம் திரு.சிவபாலகணேசன் அவர்களின் "சிவப்பிரகாசக் கதவம்" நூல் வெளியிடப்படுகிறது. "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை" நூலை யா...

மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே!

Image
கார்த்திகை விளக்கீடு கடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. (இவ்வாண்டு தமிழ்ப்பஞ்சாங்கங்களைப் பொறுத்து நவம்பர் 22, 23 ஆகிய தினங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது). ஆனால்,  அதுவும் தீபாவளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பண்டிகைகள் தான். இரண்டிலும் விளக்கு வழிபாடும் முன்னோர் வழிபாடுமே முதன்மை பெறுகின்றன. தனித்துவம் என்னவென்றால், விளக்கீடு தமிழர் மத்தியில் மட்டுமே வழக்கில் இருக்கின்றது. தீபாவளி, தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் தமிழகத்தில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் (பொ.பி 17ஆம் நூற்றாண்டு) பரவலாகக் கிடைக்க ஆரம்பிக்கின்றது என்பது பொதுவான தகவல். ஆனால் தீபாவளி தொடர்பான மிகப்பழைய தமிழ்ச்சான்று எங்கு கிடைக்கின்றது தெரியுமா? இலங்கையில். தம்பைமாநகர் (குருணாகல் - தம்பதெனியா) அரசனான (3ஆம் அல்லது 4ஆம்) பராக்கிரமபாகு முன்னிலையில், போசராச பண்டிதரால் பொ.பி 1310இல் அரங்கேற்றப்பட்ட சோதிட நூல் சரசோதிமாலை. இதன் ஏழாவது தெய்வவிரதப் படலத்தில் தீபாவளி கடைப்பிடிப்பது எப்படி என்பது பற்றிய செய்யுளொன்று காணப்படுவதுடன், அதில் "பிதிர்கள் இன்பமுறு தீபாவலி" என்ற வரியைக் ...

திரையிசை இலக்கியம்

Image
நண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது.  இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால், அவர் குறிப்பாக குறுந்தொகை வரிகளையே அதிகம் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சொன்னால், நறுமுகையே (யாயும் ஞாயும் 40), இதயம் (சிறுகோட்டுப் பெரும்பழம் 18, மந்தி உருட்டும் 38), தீண்டாய் (கன்றும் உண்ணாது 27) என்று இந்தப் பட்டியல் நீளும். சட்டென ஒரு நண்பன் ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். "தேவாவின் அரிதான, அழகான மெல்லிசை. வைரமுத்துவின் வரிகள். இதுவும் ஏதோ பழந்தமிழ்ப் பாடல் என்று தான் நினைக்கிறேன். என்னவென்று தெரியுமா?" அது கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் "சின்னச் சின்னக்கிளியே" பாடல்.                                               அவனது ஊகம் சரி தான். அது அபிராமி அந்தா...

திருக்கோவில் முருகு

Image
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி (நன்றி: Akish 4K Studio ) இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார் இருநூறு கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பில் வாழ்ந்த சைவத்தமிழ் மக்கள் கொண்டாடிப் போற்றிய திருத்தலம் அது. முழு மட்டக்களப்புத் தேசத்துக்குமே உரிமையாகவிருந்த அக்கோவில், தேசத்துக்கோவில் என்ற மரியாதையைப் பெற்றிருந்தது. வரலாற்றில் சோழராட்சிக்காலத்துடனும், கலிங்க மாகன் காலத்துடனும் இணைத்து நோக்கக்கூடிய பழைமை வாய்ந்த திருக்கோவில், கண்டி மற்றும் கோட்டை மன்னர்களின் மானியங்களையும், மட்டக்களப்பை ஆண்ட சிற்றரசர்களின் மதிப்பையும் பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அருட்கோவில். அத்திருத்தலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று பூர்வமாக ஆராய்கின்றது இந்த ஆய்வுக்கட்டுரை.   அறிமுகம் திருக்கோவில் என்பது தமிழரைப் பொறுத்தவரை புனிதமான சொல்லாடல். புகழ்பெற்ற இறைக்கோட்டங்களை எல்லாம் திருக்கோவில...