Posts

Showing posts with the label கேரளம்

சிங்களப் பத்தினியும் கேரளப் பகவதியும்

Image
கண்ணகி ஈழத் தமிழருக்கு மட்டும் தான் தெய்வம். ஆனால் இலக்கிய மரபில் அவலச்சுவை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த துன்பியல் நாயகி அவள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவள் நிகழ்ந்த இந்தத் தமிழ் மரபு, அந்தச் சிறு இடத்தைக் கூட அவளுக்கு கொடுக்கவே இல்லை .                                              அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலைக் கலையாடல்களான சாஸ்திரீய சங்கீத இசையிலும் சரி, திரைத்துறையிலும் சரி, கண்ணகி தெய்வப்பெண்ணாக அல்லது ஒரு கைவிடப்பட்ட அகத்துறை நாயகியாக - மறைமுகமாவேனும் - பாடப்பட்ட ஒரு இடமாவது அண்மைக்காலத்தில் பதிவாகியிருக்கிறதா? உடனே எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே மூன்று திரைப்பாடல்கள்தான். ஒன்று "ஒளிமயமான எதிர்காலம்" (எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக). அடுத்தது "போறாளே பொன்னுத்தாயி" (கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே) மூன்றாவது நாக்கமுக்க. தமிழ் வெள்ளித்திரையில் கண்ணகியின் கதை வெளியாகி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் மகாபாரதம், இராமாயணம்...

என்ன கொடுமை சந்திரமுகி இது!

Image
ஒரு சராசரி தமிழ் நைண்டிஸ் கிட்டின் மறக்கமுடியாத திரைப்படங்களின் பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய இரு படங்கள் சந்திரமுகியும் அந்நியனும். அவை வெளிவந்த 2005இல்,  பதின்ம வயதின் நடுப்பகுதியைக் கடந்துகொண்டிருந்த எனக்கு, அந்தப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.   இரண்டிலுமே முதன்மைப் பாத்திரத்துக்கு ஏற்படுவது ஒரே மனநோய். பல்லாளுமைப் பிறழ்வு அல்லது பிளவாளுமைப் பிறழ்வு (Multiple Personality Disorder / Split Personality Disorder). போதாததற்கு அவை பேய், மந்திர தந்திரம், கருடபுராணம், என்று இடைக்கிடை சமயத்தையும் தொட்டுக்கொண்டிருந்தன. இரண்டிலும் என்னை அதிகம் கவர்ந்தது சந்திரமுகி தான். அப்போதெல்லாம் அம்மன், பாளையத்து அம்மன், பொட்டு அம்மன் என்று பக்திப்படங்களை பரவசமாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பேய் என்பதற்குப் பின்னே உளவியல் காரணமும் இருக்கிறது என்று சொன்ன சந்திரமுகியின் விசித்திரமான கதைக்கரு அத்தனை பிடித்திருந்தது. அருந்ததியிலிருந்து ராகவா லோரன்சின் காஞ்சனா தொடர்கள் வரை, தென்னிந்தியத் திரையுலகை ஒரு தசாப்தத்துக்கும் மேலாக  ஆட்டுவ...

உடுராஜமுகி

Image
ஒரு 18+ பதிவு. பிடியன்ன மென்னடை கட்டுரையில் 'உடுராஜமுகி' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2009,2010 காலத்தில் எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்த கைபேசி அழைப்போசைகளில் ஒன்று அது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து ஊர் திரும்பியிருந்த யாரோ ஒருவர் தன் மலையாள நண்பரிடமிருந்து அப்பாடலை இங்கு பரப்பியிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அதை ஏதோ பக்திப் பாடல் என்று தான் நினைத்திருந்தேன். சுப்ரபாதத்தைத் தொடரும் 'வெங்கடேச ஸ்தோத்திரம்' பாடப்படும் மெட்டின் சாயலில் அது இருந்தது முதன்மையான காரணம்.  2008இல் ஸ்டீபன் தேவஸியால் சமஸ்கிருத சுலோகங்களுக்கு இசையமைத்து வெளிவந்து கொண்டிருந்த "சாக்ரெட் சாண்ட்ஸ்' அல்பத்தின் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்ற 'தோடகாஷ்டமும்' இதே மெட்டில் இசையமைக்கப்பட்டிருந்தது இன்னொரு காரணம். 2010களில் யூடியூப்பிற்கு அறிமுகமான போது விழுந்தடித்து நான் தேடிய பாடல்களில் ஒன்றாக 'உடுராஜமுகி' இருந்தது. அப்போது தான் அது ஆபிரகாம் அண்ட் லிங்கன் எனும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதை அறிந்தேன். ஜோய் ஆலுக்காஸ் விளம்...

சபரிமலை சரித்திரம் - வரலாற்றில் ஐயப்பன் 01

Image
சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சூல்தகவு படைத்த பெண்களும் உள்நுழையலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  கடந்த வியாழக்கிழமை (யனவரி 3) இரவு இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்நுழைந்ததை அடுத்து இந்தப் பதற்றம் இன்னும் தீவிரமடைந்திருக்கிறது (தி இந்து 2019). சபரிமலைக்கோவிலுக்கு அதிகளவு அடியவர்களை அனுப்பிக்கொண்டிருப்பது தமிழகம். இப்போது  இலங்கையும் அடியவர்களை பெரும் எண்ணிக்கையில் அனுப்பத் தொடங்கியிருக்கிறது ( Nagahawatte 2019 ). எனவே, சபரிமலைப் பிரச்சினையில் கருத்துக் கூறுவதற்கும், அதன் சாதக பாதகங்களை ஆராய்வதற்கும், கேரளத்துக்கு சமனான அளவு தார்மீக உரிமை, தமிழகம் மற்றும் இலங்கைக்கும் கிட்டியிருக்கிறது. ஆனால் நம்மில் பலரும் சபரிமலைக் கோவிலின் பின்னணி, ஐயப்ப வழிபாட்டின் வரலாற்றுத் தோற்றம் இது எதுவுமே தெரியாமல், இந்த விவகாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். சபரிமலை ஐயப்பனின் வரலாற்றை அறியாமல், அந்தப் பிரச்சினை தொடங்கிய மையப்புள்ளியை நாம் அறிந்துகொள்ள முடியாது.  சபரிமலைக் கோவில் (படம் நன்ற...

சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

Image
கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை. சபரிமலை ஐயப்பன் கோவில்.    முதல் இரு தீர்ப்புகளைப் பொறுத்தவரை, அவை மறைமுகமாகவோ சிறிய அளவிலோ ஏற்கனவே நம் சமூகத்தில் வழக்கில் இருந்து வந்தன. புராணங்களில் பாலினச்சிறுபான்மையினர் பற்றிய குறிப்பு எதுவும் தெளிவாக இல்லை. என்றாலும், ஆண் பெண்ணாக மாறுவது (மோகினி,  இளை), பெண் ஆணாக மாறுவது (சிகண்டி), திருநங்கைகள் (பிருகன்னளை) பற்றிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டு கஜூராகோ கலவிச்சிற்பங்களிடையே ஆண்-ஆண் கலவியும், பெண்-பெண் கலவியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருமணத்துக்கு அப்பாலான உறவுகளுக்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான புராண - இதிகாசக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன.  இதெல்லாம் ஏன் இன்று குற...

வெண்மையும் பன்மையும், பண்பாட்டின் அழகியல்!

Image
கேரளப் பண்பாட்டாடையில் சுற்றுலாப்பயணிகள் படம்:  tripadvisor.in மலையாள நாட்டவரின் பொன்னிறக்கரை கொண்ட தூவெள்ளை ஆடை மீது எனக்குப் பெரும் கிறக்கம் உண்டு. அதுபோலவே எல்லா மங்கல – அமங்கல நிகழ்வுகளிலும் சிங்களவர் அணியும் வெண்ணிறாடைகள் ‘இனம்’ (?!) புரியாத ஒரு மதிப்பை அவர்கள் மீதும் ஏற்படுத்துவதுண்டு. ஆனால், தமிழருக்கென்று இத்தகைய நிற விதிகள் எதுவும் இல்லை. தமிழரின் ஆடை அலங்காரங்கள் பகட்டானவை. சில இடங்களில் அவை சமூக ஏற்றத்தாழ்வை வெளிக்காட்டுவனவாகவும் அமைவதுண்டு. இதுபற்றிய விவாதமொன்றில் , மலையாளிகளும் சிங்களவரும் தமிழருக்கு எத்தனை நெருக்கமான பண்பாட்டுப் பங்காளிகள் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களைப் போலவே தமிழரும் வெண்ணிறாடையை தம் சீருடையாக ஏற்றுக்கொண்டால் நல்லது என்று கருத்துத் தெரிவித்திருந்தேன். குறைந்தபட்சம் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்குச் செல்லும்போதாவது தமிழச்சிகள் அதைக் கடைப்பிடிக்கலாமே என்று அந்த விவாதம் வளர்ந்தது (ஆண்கள் ஏற்கனவே வெள்ளை வேட்டி அணிகிறார்கள்) பின்பு அது “விதவையரின் ஆடைநிறம்” (மெச்சிங்கா தலையில மல்லிகைப்பூ வைங்களன்?) என்றும் “...