Posts

Showing posts with the label இனம்

அன்பென்று கொட்டு முரசே

Image
வீட்டில் நண்பர்களுடன் ஒரு விருந்துபசாரம். இஸ்லாமிய நண்பி ஒருத்தியும் குடும்பமாக வருகை தந்திருந்தாள். கொஞ்சநேரம் அளவளாவிய பின் உணவுக்கு ஆயத்தமானோம். எல்லோரும் மேசையில் வந்து அமர்ந்தார்கள். அவள் மட்டும் தயங்குவது தெரிந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. புன்னகையுடன் சொன்னேன். "பயப்பிடத் தேவல்ல. சாப்பிடுங்க. இது ஹலால். உங்கட ஊர்ல வாங்கின கோழி இறைச்சி தான்" அவள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. "தேங்ஸ். " என்றாள். இது ஒரு நண்பனுக்கு நடந்தது. தனது இஸ்லாமியத் தோழன் ஒருவன் வீட்டுக்கு முதன்முதலாகப் போயிருக்கிறான். இவன் முன் சிற்றுண்டி கொணர்ந்து வைக்கப்பட்டது. இவன் உண்ணவில்லை. அவன் "டேய் இது மாட்டிறைச்சி இல்லடா, நீ சாப்பிடலாம்" என்றிருக்கிறான். இவன் பேசாமலிருக்க, அவன் புன்னகை மாறாமல் சொன்னானாம் "வெள்ளிக்கிழமை தானே. நீ வாறாயெண்டு மரக்கறி ரோல்ஸ் தான் எடுத்து வெச்சன். சாப்பிடு." நண்பன் நெகிழ்ந்து விட்டான். அவன் உள்ளூர் வழக்கப்படி வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உண்பவன். முன்பொருமுறை பிள்ளையாருக்கென பொங்கிய பொங்கலை "இது படையலில வைக்காத பொங்கல். சாப்பிடுங்க"...

இலங்கைத் தமிழ் அடையாளமும் சைவமும்

Image
இலங்கைத் தமிழரின் இன அடையாளத்தில் மதத்தின் பங்களிப்பு என்ன?  இந்தத் தலைப்பிலான விவாதத்தை முன்பொருமுறை எங்கோ வாசித்த நினைவு. அதைத் தொகுத்து அப்போது நான் புரிந்துகொண்டது இது. இணைய விவாதங்களில் இப்போது சிறிது கூட நம்பிக்கை இல்லை என்ற நிலையிலும், இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் கருதி இங்கு இதைப் பதிவுசெய்ய விழைகிறேன். திருக்கோணமலைக் கடலில் பழைய கோணேச்சரத்தின்  எச்சங்கள்  1. உலகின் 90 வீதமான இனங்கள், மொழி சார்ந்தே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. தேசியம், இனத்துவ அடையாளம் என்பன பொதுவாக மொழி சார்ந்தவையே. 2. இன அடையாளம் பேசும் மொழி சார்ந்தது என்பதால், மதம், சாதி, பிரதேசம் சார்ந்த ஏனைய அடையாளங்களை நிராகரிக்கும் முற்போக்குவாதிகள் கூட, மொழிசார்ந்த இனத்துவ அடையாளங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தொழிநுட்பம் சார்ந்த ஒரு பண்பாட்டுப் புரட்சி ஏற்படும் போது, அதுவும் அழிந்து போகும், அதுவரை வேறு வழியில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம். 3. ஆனால் இன அடையாளம் எப்போதும் மொழி சார்ந்து இருப்பதில்லை. முன்பும் சுட்டிக்காட்டிய பல உதாரணங்கள் இருக்கின்றன. மூ...

சிவனொளிபாதப் புகழ் அறிவீரே!

Image
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டுவரும் விடயம், சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம். இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமான சிவனொளிபாதத்தில் இதுநாள் வரை இருந்த “சிவனொளிபாதம்” என்ற பெயரை நீக்கி, தமிழிலும் “புத்த ஸ்ரீபாதஸ்தானம்” என்று மாற்றப்பட்டுள்ள ஒரு பெயர்ப்பலகை தற்போது பரவலாகப் பகிரப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது. சிவனொளிபாத மலை (படம்:  http://refreshingsrilanka.blogspot.com ) உண்மையில், இந்தப்பெயர்ப்பலகை கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளைச் சந்தித்து வரும் ஒன்று. இப்பலகையில் முன்பு , சிங்களத்தில் “ஸ்ரீபாதய” என்றும், தமிழில் “சிவனொளிபாதமலை” என்றும், ஆங்கிலத்தில் “அடம்ஸ்பீக்” என்றும் எழுதப்பட்டிருந்தது. 2012இல் எடுக்கப்பட்ட  புகைப்படம். (நன்றி:  https://gate20.com ) ஆனால், 2016ஆமாண்டு, இதில் இருந்த “அடம்ஸ்பீக்” எனும் ஆங்கிலவரிகள் விஷமிகளால் அழிக்கப்பட்டிருந்தன .  சிவனொளிபாதச் சூழலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் சுற்றுலாவிடுதிகள் அமைக்கப்பட இருப்பதாக பரவிய செய்தியையும் , அதை மறுத்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையையும்  அடு...

இலங்கை முஸ்லீம்களின் இனத்துவ அடையாளம்

Image
"இனம் என்பதற்கு வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் ஏன் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழ் இனமாக இல்லை?” என்பது வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி. முகநூலில் இவ்வினா தொடர்பான ஒரு நண்பனின் பதிவுக்கு அளிக்கப்பட்ட பதில் இந்தப் பதிவு. "இலங்கை முஸ்லீம்கள் ஏன் தமிழர் இல்லை?" என்ற இந்தக் கேள்வியை வேறு விதமாக இரண்டாகக் கேட்கலாம். ஒன்று, “மதம் சார்ந்து இனத்தை வரையறுக்கலாமா?” இரண்டு, “ஒரே மொழி பேசுவோர் எல்லோரும் ஒரே இனம் தானே?”