Posts

Showing posts with the label கட்டுரை

சங்கமன்கண்டியில் தைப்பூச விழா!

Image
கதிர்காமப் பாதயாத்திரையில் தென்கிழக்கிலங்கையின் காட்டுவழி நோக்கி நகர்பவர்கள் திருக்கோவிலை அடுத்துச் சென்றுசேரும் பதி சங்கமன்கண்டி. மட்டக்களப்பு - பொத்துவில் பெருந்தெருவில் திருக்கோவிலுக்குத் தெற்கே சரியாக 13 கிமீ தொலைவில் அத்திருத்தலம் அமைந்துள்ளது. மரபாக அதை "திருக்கோவிலிருந்து ஒருகாமூச்சு" என்பார்கள். கதிர்காமப் பாதயாத்திரையின் போது பொருட்களை காவுதடியில் (கா) சுமந்து செல்வோர் நடைக் களைப்புத் தீர தங்கியிருந்து மூச்செடுக்கும் - ஓய்வெடுக்கும் தூரம் தான் ஒருகாமூச்சு. சங்கமன்கண்டி என்பது இங்குள்ள சிறுகுன்றின் பெயர். சிங்களத்தில் கந்த என்பது மலை. சங்கமன்கந்த என்றால் சங்கமனின் மலை என்று பொருள். ஆனால் தமிழில் கண்டி என்பது மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய பாதை, நுழைவாயில், மேடான இடம் என்றெல்லாம் பொருள் கொண்ட சொல். அதனாலேயே மலைநாட்டில் ஒடுங்கிய பாதையோரம் உருவாகி எழுந்த நகரொன்றும் அப்பெயரைப் பெற்றது. பொலிகண்டி, கோவிலாக்கண்டி என்று இடங்களெல்லாம் வட இலங்கையிலும் உள்ளன. எனவே சங்கமன்கண்டி என்பது சங்கமனின் நகரம் என்று பொருள். யார் அந்த சங்கமன் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. பண்டையகால ...

தண்டமிழ் திகழும் தண்பொழில்வில்லூர்

Image
அந்த ஊரின் பழைய பெயர் தம்பதிவில். சோழ அரசி தம்பதி நல்லாளின் நினைவாக அவள் மகன் மனுநேய கயவாகு, ஒரு குளம் கட்டி அந்தப்பெயரைச் சூட்டியதாக மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறும். காலனித்துவ இலங்கை வரைபடங்களில் அவ்வூர் தம்பொலிக்குளம், தமொலிகாமம், தம்பலி ஊர் என்றெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உண்மைத் தமிழன் என்றால் ஷேர் பண்ணு!

Image
“ நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை ” என்று ஆரம்பித்து , ஒரு இட்டுக்கட்டப்பட்ட அறிவியல் அல்லது வரலாற்றுத் தகவலைச் சொல்லி , அது தமிழர் கண்டுபிடித்த உண்மை என்று உரிமைகோரி , இறுதியில் “ உண்மைத் தமிழன் என்றால் ஷெயார் பண்ணு ”, “ மானத்தமிழன்னா ஷேர் பண்ணுடா ” என்று குரலை உயர்த்தி , போன சில வாரங்களில் முகநூலிலும் , வட்சப் , வைபர் குழுமங்களிலும் பெருத்த தலையிடியாக இருந்த இந்தத் தலைப்பை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டீர்கள் . அந்தத் தலைவலியால் கடுப்பாகி , அத்தகையவர்களைச் சீண்டுவதற்காக , இன்னும் சிலர் வேண்டுமென்றே உருவாக்கிய “ உண்மைத் தமிழன் என்றால் ” பதிவுகள் , பழைய பதிவுகளை விட விறுவிறுப்பாக பகிரப்பட்டு , கிலியைப் பன்மடங்கு அதிகமாக்கி இருந்தன .

தாய்லாந்து மன்னர் போற்றிய தமிழர் பாரம்பரியம்

Image
பேரூஞ்சல், பாங்கொக் இன்றைக்கெல்லாம் “ இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா ”, “ என்ன தவம் செய்தேன் தமிழனாய்ப் பிறப்பதற்கு ” என்றெல்லாம் தமிழுணர்வுடன் கூடிய நூற்றுக்கணக்கான பதிவுகளைக் கடக்காமல் , முகநூலில் நம்மால் உலாவமுடியாது . இப்போது நாம் காண இருப்பதும் அத்தகைய தலைப்புகளின் கீழ் வாசிக்கவேண்டிய விடயம் தான் என்றாலும் , இது கொஞ்சம் புதுமையானது . முகநூல் பதிவுகள் போல , சீதையைத் தேடிச்சென்ற இராமனிடம் மாரீசனை ஞாபகப்படுத்தி , “ அந்த மான் , நிக்கோ பார் ?” என்று கேட்டு தமிழனே அத்தீவுகளுக்குப் பெயர் சூட்டினான் , “ கட்டுகிறேன் அங்கு ஓர் கோயில் ” என்று சொல்லி தமிழனே கம்போடியாவில் “ அங்கோர் ” கோயிலைக் கட்டினான் – என்றெல்லாம் சும்மா அடித்து விடாமல் , கொஞ்சம் வரலாற்று ரீதியாகச் சென்று புளகாங்கிதம் அடைய இருக்கிறோம் . :)  

தமிழரும் தவ்வை வழிபாடும் - ஓர் அலசல்

Image
தலைப்பைப் படித்ததும் வாசகர் பலரது புருவங்கள் நெளியலாம். தவ்வையா? புதிதாக இருக்கின்றதே...அப்படியென்றால்; என்ன என்று அறியும் ஆவலில், அகராதிகள் மீது கண்கள் ஓடினால், அங்கு தமக்கை, அன்னை போன்ற அரும்பதங்கள் மட்டுமன்றி இன்னொரு பொருளையும் அவதானிக்கலாம். ஆம்! அதேதான்! அப்பெயரைத் தலைப்பிலிட்டு, கட்டுரையை அமங்கலகரமாக ஆரம்பிக்க விரும்பாமலேயே, கட்டுரையாளன் தவ்வை என்ற பெயரை இங்கு பயன்படுத்த முனைகிறான்.  இந்நாட்களில் மூதேவி என்பது ஒரு வசைமொழி. அமங்கலத்தின் தேவதையாகவே அவள் பிரபலம். அத்துமீறிய குறும்புகளையும், வன்முறைகளையும் அவள் பெயராலேயே 'சேட்டை' என்றும் 'சேஷ்டை' என்றும் இகழ்கிறோம். ஆனால், தவ்வை வழிபாடு ஒருகாலத்தில் தமிழர் மத்தியில் எத்தகைய இடத்தைப் பெற்றிருக்கிறது என்று ஆராயும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. தவ்வை, கேட்டை, சேட்டை, மாமுகடி, கெடலணங்கு போன்ற பல பெயர்களால் போற்றிப் புகழப்படும் (?!) அளவுக்கு, சிறப்புவாய்ந்த ஒரு தொன்றமிழ்த் தெய்வமாக மூதேவி இருந்திருக்கிறாள் என்ற செய்தி நமக்கு ஆச்சரியத்தைத் தரலாம். தமிழரின் தொன்மை வழிபாடு இயற்கையைச் சார்ந்தது. மரங்களை 'க...