Posts

Showing posts with the label சிங்களம்

சிங்கள இலக்கியங்களைப் படைத்த தமிழர்

Image
சீதாவாக்கை அரசின் முதலாம் இராசசிங்க மன்னன் (~1600) அவையில் இருந்த ஒரு அலுவலர் “அழகியவண்ண முகவெட்டி”. அவர் பல்வேறு சிங்கள இலக்கியங்களைப் படைத்தவர். சிங்கள அரசு மீது போர் தொடுத்து போர்த்துக்கேயத் தளபதி “கொன்’ச்டான்டி சூசா” ( Constantine De Sa De Noronha) தோற்றுப் பின்வாங்கியதைப் பாடும் “கொன்சுதாந்தினு ஃகட்டன” இவர் இயற்றிய சிங்கள இலக்கியங்களில் புகழ்பெற்றது. இதைப் பின்பற்றி பல “கட்டன” இலக்கியங்கள் சிங்களத்தில் பாடப்பட்டுள்ளன. இவரது இன்னொரு நூல் சுபாசிதம். தமிழ் - சங்கத மொழி நீதிநூல்களில் இடம்பெற்ற பல செய்யுள்கள் சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. “அழகியவண்ண முகவெட்டி” என்ற பெயரிலுள்ள முகவெட்டி என்பது ஒரு பதவிப் பெயர். சோழர் காலத்தில் தமிழகத்திலும் முகவெட்டி என்ற அரச பதவி நீடித்தது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவருகிறது. அப்பதவியிலிருந்தோரின் பணி என்னவென்பது தமிழகத்தில் தெளிவில்லை. ஆனால் இலங்கையில் இருந்த முகவெட்டிகள் பெரிதும் அரச தொடர்பாடல்களில் மொழிமாற்றத்திலும் ஆவணப் பதிவுகளிலும் உதவியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்களின் முதன்...

உயிர் மெய்

Image
வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் உன் பெயர் அழகாக இருக்கிறது என்று நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் துலாஞ்சனன் என்பது சிங்களப்பெயர். சிங்களவரிடம் அந்த உச்சரிப்பை ஒத்த "டுலங்ஜன்" என்ற பெயர் நல்ல பிரசித்தம். (ஒளிர்கின்ற கண் இமையைக் கொண்டவன் என்ற விந்தையான பொருள். சிங்களத்தில் "ஞ்ச" என்ற ஒலிக்கூட்டு வழக்கத்தில் இல்லை. அது ஞ்ஞ அல்லது ங்ஜ என்று தான் வரும். என்றாலும் அங்கு ஞகரத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் இருக்கின்றன. தமிழ் போலவே சிங்களத்திலும் ஞகரம் அரிதான ஒலிப்பு. எனவே துலாங்ஜனன், துலான்ஸனன், துலாஞ்ஞனன் என்றெல்லாம் என் பெயர் சிங்களத் தோழர்களால் கடித்துக் குதறப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு ஒரு தமிழ் ஆசிரியரே கஷ்டப்பட்டு துலாங்ஙன் என்று அழைத்த கிருபை.. ச்சீ பெருமை அதற்குண்டு. உத்தியோகபூர்வ ஆவணங்களில் என் பெயரை சிங்களத்தில் எழுதும்போது சிக்கலாக இருந்தது. கடந்த ஆண்டு தொழில் நிமித்தம் முறைப்படி சிங்களத்தை கற்கத் தொடங்கியபோது ஆசிரியையிடம் என் சிக்கலைச் சொன்னேன். அவர் பூர்வீக சிங்களவர். இளம்பெண் கூட. மொழி இலக்கணத்தை தாங்கள் பெயர் எழுதும் போது பார்ப்பதில்லை. விரும...

சிங்களப் பத்தினியும் கேரளப் பகவதியும்

Image
கண்ணகி ஈழத் தமிழருக்கு மட்டும் தான் தெய்வம். ஆனால் இலக்கிய மரபில் அவலச்சுவை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த துன்பியல் நாயகி அவள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவள் நிகழ்ந்த இந்தத் தமிழ் மரபு, அந்தச் சிறு இடத்தைக் கூட அவளுக்கு கொடுக்கவே இல்லை .                                              அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலைக் கலையாடல்களான சாஸ்திரீய சங்கீத இசையிலும் சரி, திரைத்துறையிலும் சரி, கண்ணகி தெய்வப்பெண்ணாக அல்லது ஒரு கைவிடப்பட்ட அகத்துறை நாயகியாக - மறைமுகமாவேனும் - பாடப்பட்ட ஒரு இடமாவது அண்மைக்காலத்தில் பதிவாகியிருக்கிறதா? உடனே எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே மூன்று திரைப்பாடல்கள்தான். ஒன்று "ஒளிமயமான எதிர்காலம்" (எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக). அடுத்தது "போறாளே பொன்னுத்தாயி" (கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே) மூன்றாவது நாக்கமுக்க. தமிழ் வெள்ளித்திரையில் கண்ணகியின் கதை வெளியாகி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் மகாபாரதம், இராமாயணம்...

தேனவரை நாயனாரும் தெண்டீர ஈச்சரமும்

Image
(2019 ஒக்டோபர் 18ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற இலங்கை இந்து பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. நிகழ்த்துகையின் விழிய வடிவத்தைக்  கட்டுரையின் கீழே காணலாம்.) சுருக்கங்கள்: பொ.பி - பொது ஆண்டுக்குப் பின் (கி.பி), ம.வ - மகாவம்சம் உப்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு தேவாலே, தெவிநுவர. கட்டுரைச் சுருக்கம்: தென் மாகாணத்தின் மாத்தறை நகருக்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில், தெவிநுவர நகரில் அமைந்திருக்கிறது தெவுந்தர உபுல்வன் ஸ்ரீ விஷ்ணு தேவாலயம். உபுல்வன் என்ற சிங்களப்பெயருக்கு ‘உற்பலவண்ணன்’, நீல அல்லியின் வண்ணத்தைக் கொண்டவன், என்று பொருள். சிங்கள பௌத்த மரபின் படி இலங்கைத்தீவின் நாற்பெரும் காவல் தெய்வங்களில் ஒருவன் உபுல்வன். தெவிநுவரையிலுள்ள உபுல்வன் தேவாலயத்தின் அருகே சிதைந்த கற்றூண்களையும் பண்டைய இடிபாடுகளையும் இன்றும் காணலாம். அதுவே மத்திய கால இலங்கையில் திருமாலுக்கென அமைந்து புகழ்பூத்திருந்த தேனவரை நாயனார் கோவில். அக்கோவிலுக்கு அருகே கிடைத்த தொல்பொருட்சான்றுகள் அங்கு சிவன் கோவிலொன்றும் இருந்ததைச் சொல்கின்றன. இலங்கைத் தமிழ...

வெல்கம் வேரத் தேவர்

Image
அரசியல், சூழ்நிலைக் காரணங்களால், புத்தபிரான் இன்று தமிழராலும் வெறுக்கப்படுபவராக மாறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் நம் முப்பாட்டன்மாருக்கு எத்தனை நெருக்கமானவராக இருந்தார் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. அப்படியும் அதில் சிறிது ஐயமிருந்தால், நீங்கள் செல்லவேண்டிய இடம் ஒன்று இலங்கையில் இருக்கிறது. சிங்கள வரலாற்றாசிரியர்களே தமிழ்ப்பௌத்த விகாரை என்று சான்றிதழ் கொடுத்த இடம். திருக்கோணமலையின் வெல்கம் விகாரை. வெல்கம் வேரத் தேவர்   கடந்த வாரம் நண்பர்களோடு திருக்கோணமலை சுற்றுலா சென்றபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சரித்திரப்புகழ் வாய்ந்த கன்னியா வெந்நீரூற்றுக்கு வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது வெல்கம் விகாரை. சோழர் படையெடுப்பின் பின் 'ராஜராஜப்பெரும்பள்ளி'. அது தெற்கு நோக்கியதாக சதுரமான அமைப்பில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மையத்தில் சுண்ணக்கல்லாலான புத்ததேவரின் திருவுருவம் நின்ற நிலையில் காட்சியளிக்க, சுற்றி வந்து வணங்கும் வகையில் கருவறை அமைக்கப்பெற்றிருந்தது. கருவறையின் முன்பு, வலம் இடமாக இரு சி...