கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் , திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு , இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது . இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் ப . புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா . இந்திரபாலா (2021:8,18) ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான – அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர் . இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை, அவர்களால் கலிங்க மாகோனாக அடையாளம் காண முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது . கலிங்க மாகோனை பாலி - சிங்கள நூல்கள் கொடுங்கோலனாகவும் , இலங்கைத் தமிழ் நூல்கள் சரித்திர நாயகனாகவும் சித்தரிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு : [ சிதைந்த வடமொழி சுலோகம் ] ஸ்வஸ்திஸ்ரீ …… .[ த்திகள் ?] [ ஸ்...