தூவெண்மதி சூடி
நிலவில் இந்தியாவின் சந்திரயானம் போய் இறங்கி இருக்கிறது. நிலவு சிவனின் முடியில் இருக்க, சந்திரயானம் இறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி முனை' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நிலவின் நிலைமை இப்படியிருக்க, முப்பரிமாணக் கோளப் பொருளான சந்திரனை சிவன் இருபரிமாணப் பிறையாக தலையில் சூடுவது பற்றி நண்பரொருவர் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தார். சிவன் தலையில் பிறை சூடியிருப்பது சங்க இலக்கியங்களிலேயே பதிவாகியிருக்கிறது. அதியமான் நெடுமானஞ்சியிடம் நெல்லிக்கனி பெற்ற ஔவை சிவனுக்கு "பால்புரைப் பிறைநுதல் பொலிந்த சென்னி" என்கின்றாள். சிவன் பிறையைச் சூடியது (உரு 1) பற்றி புராணக் கதைகள் உள்ளன. . உரு 1. தூவெண்மதி சூடி ஒரு கதை, தக்கனின் 27 புதல்வியரை மணந்துகொண்ட சந்திரன், அவர்களுள் உரோகிணி ஒருத்தி மீது மாத்திரம் அன்பு கொண்டிருந்ததால், தக்கனால் தேய்ந்தழிந்து போகுமாறு சபிக்கப்படுகிறான். அச்சாபம் தேய்ந்து வளர்வதாக சிவனால் மாற்றப்படுகிறது. மனைவியை ஆடவன் கைவிட்டால் என்ன நிகழும் என்பதை (சில கதைகளின் படி சந்திரனின் பத்தியை ) உலகுக்கு உணர்த்த அவனை தேய்ந்துபோன பிறையாகவே சூடிக்கொள்கிறார் சிவன். இன்னொர...