Posts

Showing posts with the label பண்பாடு

தமிழ்ப் புத்தாண்டும் மரபுக்குறியீடுகளும்

Image
புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறியபோது அவதானித்தது இது. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப் பொருத்தமான வாழ்த்து அட்டை எதுவும் இணையத்தில் இல்லை. பெரும்பாலும், கோலம், நிறைகுடம், வாழைத்தோரணம், தஞ்சைப்பெருங்கோவில், பிள்ளையார், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்ட சாதாரண வாழ்த்து அட்டைகள். இவையா தமிழ்ப்புத்தாண்டின் அடையாளம்? புத்தாண்டுக்கான வாழ்த்து அட்டை, புத்தாண்டு மரபுகளைக் காண்பிக்க வேண்டாமா? செய்தெண்மையை (AI) நாடினால், அது தரும் படங்களும் தகவற்பிழை கொண்டனவாக இருந்தன. சாமந்திப்பூக்கள்? - சாமந்திப்பூக்கள் கொண்ட தோரணம் (சாமந்தி / marigold நம் மண்ணின் மலர் அல்ல; அது தென்னாசியாவில் தோன்றவில்லை; அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது). சாமந்திப்பூ நம் மண்ணின் மலர் அல்ல - சுவசுதிகா சின்னம் பொறித்த நிறைகுடம் (வடநாட்டு மரபு, தமிழ் மரபில் திருநீறு சாற்றியிருப்பது அல்லது திலகம் தரித்தது) நிறைகுடத்திற்கு திருநீறு சாற்றுவதே தமிழ்மரபு. - நாமம் தரித்த சூரியன் (சமயக்குறி எதுவுமற்ற சூரியன், சைவத்தமிழ் மரபில் திருநீறு தரித்த சிவசூரியன்), இப்படிப்பல. சரிதான் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். பிற இனக்குழுக்...

சிங்களக் கல்வெட்டில் கலி ஆண்டு

Image
கலியாண்டுத் தொடரின் பாவனையை இலங்கையில் தேடிக்கொண்டிருந்தபோது முக்கியமான தொல்லியல் சான்று ஒன்று கிடைத்தது. கண்டி நகருக்கருகே மாவலியாற்றின் கரையில் "கம்பளை" ஊரில், கண்டி அரசு தோன்றுவதற்கு முன்னர் “கங்காசிறீபுர அரசு” நூறாண்டுகள் நீடித்திருந்தது. அந்தக் கங்காசிறீபுரத்தின் பழைமைவாய்ந்த விகாரங்களில் ஒன்றான நியங்கம்பாய (Niyamgampāya) இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள அதன் கட்டுமானம் இருநூறாண்டுகள் பழைமைவாய்ந்தது என்றபோதும், அவ்விகாரம் அதற்கும் பல நூறாண்டுகள் தொன்மையானது என்கிறார்கள். கண்டியின் கடைசி மன்னன் சிறீ விக்கிரம இராசசிங்கன் காலம் வரை (1804) இடம்பெற்ற தொடர்ச்சியான திருப்பணிகளால் அங்கிருந்த தொல்பொருட்கள் பல மறைந்தொழிந்துவிட்டன. அப்படி, நியங்கம்பாய விகாரத்தில் இருந்த கம்பளை அரசன் மூன்றாம் விக்கிரமபாகுவின் (1357 - 1374) சிங்களக் கல்வெட்டொன்று இன்று மறைந்துவிட்டது. ஆனாலும் நல்லூழாக ஏட்டில் எழுதிவைக்கப்பட்ட அதன் பிரதி கிடைத்திருக்கிறது. இலங்கையில் கலி ஆண்டின் பயன்பாடு பற்றிய மிகப்பழைய சான்றுகளுள் ஒன்று அது. விக்கிரமபாகு அரசனின் ஆட்சியாண்டு மூன்று ஆண்டுக்கணக்குகளில் அங...

சிங்கள இலக்கியங்களைப் படைத்த தமிழர்

Image
சீதாவாக்கை அரசின் முதலாம் இராசசிங்க மன்னன் (~1600) அவையில் இருந்த ஒரு அலுவலர் “அழகியவண்ண முகவெட்டி”. அவர் பல்வேறு சிங்கள இலக்கியங்களைப் படைத்தவர். சிங்கள அரசு மீது போர் தொடுத்து போர்த்துக்கேயத் தளபதி “கொன்’ச்டான்டி சூசா” ( Constantine De Sa De Noronha) தோற்றுப் பின்வாங்கியதைப் பாடும் “கொன்சுதாந்தினு ஃகட்டன” இவர் இயற்றிய சிங்கள இலக்கியங்களில் புகழ்பெற்றது. இதைப் பின்பற்றி பல “கட்டன” இலக்கியங்கள் சிங்களத்தில் பாடப்பட்டுள்ளன. இவரது இன்னொரு நூல் சுபாசிதம். தமிழ் - சங்கத மொழி நீதிநூல்களில் இடம்பெற்ற பல செய்யுள்கள் சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. “அழகியவண்ண முகவெட்டி” என்ற பெயரிலுள்ள முகவெட்டி என்பது ஒரு பதவிப் பெயர். சோழர் காலத்தில் தமிழகத்திலும் முகவெட்டி என்ற அரச பதவி நீடித்தது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவருகிறது. அப்பதவியிலிருந்தோரின் பணி என்னவென்பது தமிழகத்தில் தெளிவில்லை. ஆனால் இலங்கையில் இருந்த முகவெட்டிகள் பெரிதும் அரச தொடர்பாடல்களில் மொழிமாற்றத்திலும் ஆவணப் பதிவுகளிலும் உதவியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்களின் முதன்...

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்

Image
நண்பனின் கைபேசி அழைப்பு. “மகன் பிறந்திருக்கிறான். *@#$% நட்சத்திரம். கூட்டெண் *#%$ வரவேண்டும். நல்ல தனித் தமிழ்ப்பெயர் பார்த்துச் சொல்.” நான் வேண்டுமென்றே கேட்டேன். “நல்ல தனித்தமிழ் என்றால் கிரந்த எழுத்து சேர்க்காத தூய தமிழ்ப்பெயர் தானே?” “அப்படி எல்லாம் இல்லை. இன்றைய போக்குக்கு ஏற்ற நல்ல ஒயிலான பெயர். சொல்லிப்பார்க்க நன்றாக இருக்கவேண்டும்.” உறவினர், நண்பர்களில் நிறைய குழந்தைகளுக்கு பெயர் வைக்க உதவியிருக்கிறேன். மிகச்சில சந்தர்ப்பங்களிலேயே அப்பெயரையிட்டு திருப்திப்பட முடிந்திருக்கிறது. காரணம் அக்குழந்தைகளின் பெற்றோர் போடும் இரண்டு அன்புக்கட்டளைகள். அந்தக் கட்டளைகளை அவர்களிடம் நிபந்தனையாகத் திணிப்பவர்கள் சோதிடர்கள். குழந்தைகளுக்கு சாதகம் எழுதும்போதே “பிறந்த நட்சத்திரம் இது என்பதால் இன்ன இன்ன எழுத்தில் பெயர் வைக்கவேண்டும், இன்ன இன்ன கூட்டெண் வருமாறு பெயர் வைக்க வேண்டும்” என்று இரண்டு விதிகளை எழுதிக்கொடுத்து விடுகிறார்கள். விளைவு தமிழ்ப்பெயர்கள் இன்று வைக்கப்படுவதில்லை. குறைந்தபட்சம் தமிழ்த் தோற்றம் காட்டும் இந்தியப் பண்பாட்டுப் பெயர்கள் கூட இன்றைய தமிழ்த் தலைமுறையினருக்கு வைக்கப்படுவதி...

சங்கமன்கண்டியில் தைப்பூச விழா!

Image
கதிர்காமப் பாதயாத்திரையில் தென்கிழக்கிலங்கையின் காட்டுவழி நோக்கி நகர்பவர்கள் திருக்கோவிலை அடுத்துச் சென்றுசேரும் பதி சங்கமன்கண்டி. மட்டக்களப்பு - பொத்துவில் பெருந்தெருவில் திருக்கோவிலுக்குத் தெற்கே சரியாக 13 கிமீ தொலைவில் அத்திருத்தலம் அமைந்துள்ளது. மரபாக அதை "திருக்கோவிலிருந்து ஒருகாமூச்சு" என்பார்கள். கதிர்காமப் பாதயாத்திரையின் போது பொருட்களை காவுதடியில் (கா) சுமந்து செல்வோர் நடைக் களைப்புத் தீர தங்கியிருந்து மூச்செடுக்கும் - ஓய்வெடுக்கும் தூரம் தான் ஒருகாமூச்சு. சங்கமன்கண்டி என்பது இங்குள்ள சிறுகுன்றின் பெயர். சிங்களத்தில் கந்த என்பது மலை. சங்கமன்கந்த என்றால் சங்கமனின் மலை என்று பொருள். ஆனால் தமிழில் கண்டி என்பது மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய பாதை, நுழைவாயில், மேடான இடம் என்றெல்லாம் பொருள் கொண்ட சொல். அதனாலேயே மலைநாட்டில் ஒடுங்கிய பாதையோரம் உருவாகி எழுந்த நகரொன்றும் அப்பெயரைப் பெற்றது. பொலிகண்டி, கோவிலாக்கண்டி என்று இடங்களெல்லாம் வட இலங்கையிலும் உள்ளன. எனவே சங்கமன்கண்டி என்பது சங்கமனின் நகரம் என்று பொருள். யார் அந்த சங்கமன் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. பண்டையகால ...

மரபு : எஞ்சியிருப்பதைத் தக்க வைத்தல்.

Image
நிறையத்தடவை எழுதி அழித்துவிட்டுப் பதிவு செய்கிறேன். இதை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் இதை வாசிக்கும் பெரும்பாலானோரை இந்தப்பதிவு மகிழ்ச்சிப்படுத்தப் போவதில்லை என்பதை அறிவேன். அப்படி இருந்தும் எழுதுவதற்கான காரணம் மூன்று. முதலாவது, இந்தச் சம்பவம் ஒரே ஒரு ஊரில் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருப்பது. இரண்டாவது, முழு தமிழ்க் கூட்டு மனமுமே இதை சரியென அங்கீகரிக்கின்றது. இதில் தவறேதும் இருப்பதாக அது எண்ணவில்லை. அந்த அபத்தத்தை யாராவது சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். மூன்றாவது நடந்தது நடந்தது தான். எதிர்காலத்திலாவது கொஞ்சம் இருப்பவற்றை காத்துக்கொள்ள மாட்டோமா என்ற நப்பாசை. சரி. என்ன தான் பிரச்சினை? தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு இடம்பெற்று இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஆம், அதனால் என்ன? கோவில்களில் திருப்பணிகள் இடம்பெறும்போது இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். முதலாவது, கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பில் பழைமை மாறுமளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை. இரண்டாவது, கோவிலின் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...