Posts

Showing posts with the label வரலாறு

அரம்பையர் நகரம் | தாய்லாந்து 01

Image
தாய்லாந்தில் ஒரு பயிற்சி நெறி. அறிவித்தல் கிடைத்துவிட்டாலும் பாங்கொக் செல்லப் போவதில்லை என்பதை அறிந்தபோது சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது.  எங்கள் பயிற்சிநெறி தாய்லாந்தின் ஈசான் பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈசான் என்றால் ஈசானமூலை. வடகிழக்குப் பகுதி. அங்கு நிகழ்வைப் பொறுப்பேற்றிருந்த ஊபன் ரச்சதானிப் பல்கலைக்கழகத்துக்கும் பாங்கொக்கிற்கும் சுமார் 600 கிமீ தூரம். உள்ளூர் வானூர்திச் சேவை இருந்தது.    ஆனால் பயணச்சீட்டு கையில் கிடைத்ததும் மகிழ்வாக இருந்தது. பாங்கொக்  வானூர்தியகம் சென்று "ஊபன்" உள்நாட்டு வானூர்தி ஏறும் வரை இடைத்தங்கல் நேரம் 10 மணித்தியாலங்கள்! பாங்கொக்கின் "பிரான் நகர்" - Phra Nakhon மையப்பகுதி பாங்கொக் சுவர்ணபூமி வானூர்தியகத்திலிருந்து பாங்கொக் நகருக்கு 32 கிமீ தூரம். ஆனால் நெரிசலால் பயணம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எடுக்கலாம். போக வர இரண்டு மணிநேரம். பன்னாட்டுக் குடிவரவில் ஒன்றரை மணிநேரம்.  உள்ளூர் குடிவரவுக்கு ஒன்றரை மணிநேரம் என ஐந்து மணிநேரம் கழித்தாலும், ஐந்து மணித்தியாலம் எஞ்சியிருக்கிறது. ஆகா,  நன்கு திட்டமிட்டால்...

சிங்கள இலக்கியங்களைப் படைத்த தமிழர்

Image
சீதாவாக்கை அரசின் முதலாம் இராசசிங்க மன்னன் (~1600) அவையில் இருந்த ஒரு அலுவலர் “அழகியவண்ண முகவெட்டி”. அவர் பல்வேறு சிங்கள இலக்கியங்களைப் படைத்தவர். சிங்கள அரசு மீது போர் தொடுத்து போர்த்துக்கேயத் தளபதி “கொன்’ச்டான்டி சூசா” ( Constantine De Sa De Noronha) தோற்றுப் பின்வாங்கியதைப் பாடும் “கொன்சுதாந்தினு ஃகட்டன” இவர் இயற்றிய சிங்கள இலக்கியங்களில் புகழ்பெற்றது. இதைப் பின்பற்றி பல “கட்டன” இலக்கியங்கள் சிங்களத்தில் பாடப்பட்டுள்ளன. இவரது இன்னொரு நூல் சுபாசிதம். தமிழ் - சங்கத மொழி நீதிநூல்களில் இடம்பெற்ற பல செய்யுள்கள் சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. “அழகியவண்ண முகவெட்டி” என்ற பெயரிலுள்ள முகவெட்டி என்பது ஒரு பதவிப் பெயர். சோழர் காலத்தில் தமிழகத்திலும் முகவெட்டி என்ற அரச பதவி நீடித்தது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவருகிறது. அப்பதவியிலிருந்தோரின் பணி என்னவென்பது தமிழகத்தில் தெளிவில்லை. ஆனால் இலங்கையில் இருந்த முகவெட்டிகள் பெரிதும் அரச தொடர்பாடல்களில் மொழிமாற்றத்திலும் ஆவணப் பதிவுகளிலும் உதவியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்களின் முதன்...

பொலனறுவைச் சோழர் கோவில்கள்

Image
  (கனடாவிலிருந்து வெளியாகும் தாய்வீடு இதழின் 2023 ஓகத்து மாத இதழில் வெளியான கட்டுரை. இதழை இங்கு படிக்கலாம்)   பொலனறுவை இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் “ஜனநாதமங்கலம்” என்ற பெயரில் ஆண்ட பூமி. அவர்களிடமிருந்து இலங்கையை மீட்ட விஜயபாகு மன்னன் அரசு புரிந்த மண். இலங்கையின் புகழ்பெற்ற மன்னர்களான முதலாம் பராக்கிரமபாகு, நிசங்கமல்லன் உள்ளிட்ட பலர் வாழ்ந்த தலைநகர். கலிங்க மாகோன் இறுதி மன்னனாக வீற்றிருந்து ஆண்ட நிலம். கடந்த ஒரு மாத இடைவெளியில் வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று நண்பர்களோடு பேசக்கிடைத்தது. அதிசயமாக மூவருமே பொலனறுவை பற்றிப் பேசினார்கள். இருவர் அங்கு குடும்பத்தோடு சுற்றுலா போய் அங்கிருந்த சைவ – வைணவக் கோவில்களைப் பார்வையிட்டு வந்திருந்தார்கள்.   அவர்களில் ஒருவரால் இரண்டே இரண்டு கோவில்களையே பார்க்க முடிந்திருந்தது. அவர் பாவமாக “பொலனறுவையிலுள்ள பெரும்பாலான சோழர் காலக் கோவில்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. கூகிள் வரைபடத்திலும் ஒழுங்கான தரவு இல்லை. அந்தக் கோவில்கள் பற்றிய விபரம் எங்கு கிடைக்கும்?” என்று கேட்டார்.   பொலனறுவையில் அமைந்திருக்கும் பெரும...

ஐரோப்பிய கால ஆவணங்களில் போரதீவுப்பற்று

Image
இன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றான போரதீவுப்பற்று, அம்மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்பிரதேசமாகும். வடக்கே அத்தியாமுன்மாரி ஆற்றுக்கும் கிழக்கே பழுகாமத்து ஆறு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு வாவிக்கும் தெற்கே குரங்குத்தீவு ஆற்றுக்கும் மேற்கே இராசக்கல் மலை மற்றும் புளுகுணாவை ஏரி என்பவற்றுக்கும் இடைப்பட்டதாக சுமார் 180 சதுரகிமீ பரப்பில்   விரிந்து விளங்குகின்றது. வரைபடம் 01. 1695இல் வரையப்பட்ட பழைய இடச்சு வரைபடம். இதில் போரதீவு கிராமம் (Farredive) காட்டப்பட்டுள்ளது. மூங்கிலாறு எருவிற்பற்று (?) ஆறு (Riv van E.patto) என்று காட்டப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடியிருப்பு (Kalloewanje koederipoe), கோட்டைக்கல்லாறு (Chinnacalette சின்னக்கல்லாறு), நீலாவணை (Melewanone) ஊர்களும் தென்படுகின்றன.

அனுராதபுரத்துக் கண்ணகி படிமங்கள்

Image
இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே.  அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின் அடையாளப்படுத்தலின் படி இவை இரண்டும் சைவ இறைமூர்த்தமான மாதொருபாகன் (அர்த்தநாரீசுவரர்) வடிவங்கள். ஆனால், இவை இரண்டின் உடலமைப்பும் ஆண் பாதி பெண் பாதி என்று இனங்காணமுடியாதவாறு  பெண்ணுடலின் அங்க இலக்கணங்களுடனேயே வடிக்கப்பட்டுள்ளன. 

கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று

Image
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் , திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு , இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .   இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் ப . புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா . இந்திரபாலா (2021:8,18) ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான – அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர் . இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை,   அவர்களால்   கலிங்க மாகோனாக அடையாளம்   காண   முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது . கலிங்க மாகோனை    பாலி  -  சிங்கள   நூல்கள்   கொடுங்கோலனாகவும் ,  இலங்கைத்   தமிழ்   நூல்கள்   சரித்திர   நாயகனாகவும்   சித்தரிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.    கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு :   [ சிதைந்த வடமொழி சுலோகம் ]   ஸ்வஸ்திஸ்ரீ …… .[ த்திகள் ?] [ ஸ்...

இலங்கையின் மிகப்பழைய பிள்ளையார்

Image
  தமிழ்ச்சூழலில் முற்போக்குவாதிகள் என்று தம்மை சொல்லிக்கொள்வோரால் பிள்ளையார் அளவுக்கு ஆரியக்கடவுள், வந்தேறித்தெய்வம் என்று பயங்கரமாகத் தாக்கப்பட்ட கடவுள் வேறெவரும் இருக்கமுடியாது. உண்மையில் பிள்ளையார் என்ற பெயரே பிள்ளையாருடையது இல்லை தான். தமிழில் சிவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்ட அத்தனை கடவுளருமே பிள்ளையார் என்று அழைக்கப்பட்டனர். மூத்த பிள்ளையார் (விநாயகர்), இளைய பிள்ளையார் (முருகன்), வடுகப் பிள்ளையார் (வைரவர்), சேய்ஞலூர்ப் பிள்ளையார் (சண்டேசுவரர்) என்று பல பெயர்களை கல்வெட்டு - இலக்கியங்களில் காணலாம். சம்பந்தருக்கும் "ஆளுடைய பிள்ளையார்" என்ற பெயருண்டு. இப்படி நிறையப் பிள்ளையார்கள் இருந்தபோதும், அந்தப்பெயர் பிற்காலத்தில் விநாயகருக்கே தனித்துவமான பெயரானது. தமிழில் இத்தனை வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கடவுள் எப்படி வந்தேறியாக இருக்க முடியும்? கணபதி வெங்கலப்படிமம், பொலனறுவை (12-13ஆம் நூற்றாண்டு)