Posts

Showing posts from August, 2018

சிவனொளிபாதப் புகழ் அறிவீரே!

Image
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டுவரும் விடயம், சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம். இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமான சிவனொளிபாதத்தில் இதுநாள் வரை இருந்த “சிவனொளிபாதம்” என்ற பெயரை நீக்கி, தமிழிலும் “புத்த ஸ்ரீபாதஸ்தானம்” என்று மாற்றப்பட்டுள்ள ஒரு பெயர்ப்பலகை தற்போது பரவலாகப் பகிரப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது. சிவனொளிபாத மலை (படம்:  http://refreshingsrilanka.blogspot.com ) உண்மையில், இந்தப்பெயர்ப்பலகை கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளைச் சந்தித்து வரும் ஒன்று. இப்பலகையில் முன்பு , சிங்களத்தில் “ஸ்ரீபாதய” என்றும், தமிழில் “சிவனொளிபாதமலை” என்றும், ஆங்கிலத்தில் “அடம்ஸ்பீக்” என்றும் எழுதப்பட்டிருந்தது. 2012இல் எடுக்கப்பட்ட  புகைப்படம். (நன்றி:  https://gate20.com ) ஆனால், 2016ஆமாண்டு, இதில் இருந்த “அடம்ஸ்பீக்” எனும் ஆங்கிலவரிகள் விஷமிகளால் அழிக்கப்பட்டிருந்தன .  சிவனொளிபாதச் சூழலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் சுற்றுலாவிடுதிகள் அமைக்கப்பட இருப்பதாக பரவிய செய்தியையும் , அதை மறுத்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையையும்  அடு...

வெள்ளாவி - தூமையாடைகளின் துயரம்

Image
பரஞ்சோதி, தன் தாய் மாதவியுடன் வசிக்கிறாள். குடும்பச்சூழ்நிலை காரணமாக மாதவி பெரிய இடங்களை கொஞ்சம் ‘அனுசரித்து’ போகவேண்டி நேரிடுகிறது. தாயின் நடத்தை பற்றி  தெரிந்துகொள்ளும் மகள் அடிக்கடி தாயோடு சண்டை பிடிக்கிறாள். பருவ வயதில் மகளை வைத்துக்கொண்டு, தன்னைச் சுற்றும் கண்களிடமிருந்தும் மகளைக் காப்பாற்ற வேண்டுமே என்று, தாய்மனம் தவிக்கிறது.  மருமகனான  நாகமணிக்கு  மகளைக் கட்டிவைக்க மாதவி முயல்கிறாள். வயது வித்தியாசத்தால் தயங்குகிறான் நாகமணி.  திடீரென்று ஏற்படும் மாதவியின் நோய் காரணமாக தாயும் மகளும் சமாதானமாகும் சந்தர்ப்பத்தை காலம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஆனால் சில நாட்களிலேயே மாதவி அஞ்சியது நடந்து விடுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் கர்ப்பமடையும் பரஞ்சோதி, “யாரால் என்று தெரியாது” என்று சொல்லிவிடுகிறாள். அது யாரென்று ஊகித்து அவனை நான்கு கேள்வி கேட்கச் செல்லும் மாதவி, அவளே எதிர்பாராத கேள்விகளால் திக்குமுக்காடுகிறாள். அன்றிரவே துக்கம் தாளாமல் இறந்தும் விடுகிறாள்.   அதன் பின் நாகமணி என்ன செய்தான், பரஞ்சோதியின் நிலைமை என்ன ஆனது, தன் குழந்தையின் தகப்பன் யார...

மரபில் அறிமுகம் வேண்டும் (02)

Image
படம்: slguardian.org இந்தப்படம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அழகான மகரதோரணம்? ஏதாவது சிற்பத்தின் எஞ்சிய பகுதி? அல்லது ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் பகுதி? சரி. இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்போம். படம்: freewalker.info படம்: dhammika.blogpost.com  இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? நம்பாவிட்டால் போங்கள். இது இலங்கையின் ஒரு பழங்காலக் கழிப்பகம்! இலங்கையின் அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, முதலான எல்லாப் பண்டைய அரசிருக்கைகளிலுமே கழிவறைத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சில புத்த துறவிகளின் மடங்களுக்கருகிலும் அரண்மனை இடிபாடுகள் அருகிலும் அமைந்திருக்கின்றன. சில இடங்களில் இந்தக் கற்கழிப்பகங்களின் அடியில் கழிவுநீர்க் குழிகளும், அவற்றில் வடிநீரை சுத்திகரித்து நிலத்திற்கு விடும் மண்பானைகளும் கூட கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.  மிகப்பழைய கழிவறைக் கட்டமைப்பு. கீழே கழிவுப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. படம்:flickr.com படம்: lakdasun.com கால்களை ஊன்றும் தளப்பகுதி, சிறுநீர் - மலம் கழிக்கும் இரு குழிகள் என்பன தவிர, இந்தக் க...