Posts

Showing posts from October, 2019

கச்சியப்பத் தமிழ்!

Image
படம்: ரமேஷ் ஹரிகிருஷ்ணசாமி தமிழில் உருவான புராணங்களில் ஒன்று கந்தபுராணம். பன்னிரண்டு தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை வெவ்வேறு காலங்களை இதற்குச் சொல்வதுண்டு. இதைப் பாடிய கச்சியப்பர், வடமொழி ஸ்காந்தபுராணத்தின் ஒரு பாகத்தையே தமிழில் கந்தபுராணமாகத் தான் பாடுவதாகச் சொல்லியிருந்தாலும், தமிழ் மரபுக்கேற்ப இதில் அவர் பல மாற்றங்களைச் செய்திருப்பது வெளிப்படை. இந்தப் புராணம், பெரிய புராணம் மற்றும் திருவிளையாடல் புராணத்தோடு இணைத்து,  தமிழ்ச்சைவர்களின் முப்பெரும் புராணங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. நாவலரின் சைவமறுமலர்ச்சியின் பின்னணியில், தமிழகத்தை விட, இலங்கையில் கந்தபுராணம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணப் பண்பாட்டையே "கந்தபுராணக் கலாசாரம்" என்று மெச்சும் படி, அந்நூல் யாழ்ப்பாணத்தார் வாழ்வியலில் செலுத்துகின்ற தாக்கம் அதிகம். கந்த சஷ்டி விரதகாலம் முழுவதும் கந்தபுராணத்தை பாராயணம் செய்வது ஈழத்துச் சைவக்கோவில்களில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது.  உண்மையில் கந்தபுராணத்தைப் படித்தால், அதற்கு இலங்கையில் கிடைக்கும்  முதன்மையில் தவறே சொல்ல முடியாது என்றே சொல்லத்தோன்...

மாகோன் மகளார்

Image
வரலாற்றறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி. கதிராமன் தங்கேஸ்வரி நேற்று 26 ஒக்டோபர் சனிக்கிழமை தன் அறுபத்தேழாவது வயதில் காலமானார். இலங்கை வரலாற்றுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் இவர்.  கலிங்க மாகோன் பற்றியும் திருக்கோணமலையின் தொன்ம நாயகனான குளக்கோட்டன் பற்றியும் இவர் செய்த ஆய்வுகளே இவரை தமிழுலகுக்கு குறிப்பாக இனங்காட்டின எனலாம். மட்டக்களப்பு கன்னங்குடாவில் 1952ஆம் ஆண்டு  கதிராமன் - திருவஞ்சனம் தம்பதியரின் மகளாகப் பிறந்த தங்கேஸ்வரி அம்மையார், அதே ஊரின் மகாவித்தியாலயம்,  ஆனைப்பந்தி இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் பாடசாலையின் பழைய மாணவி. களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் பட்டம் பெற்றவர். மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தார். 'விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வுகள்' என்பது 1982இல் வெளியான இவரது முதல் நூல். தொடர்ந்து குளக்கோட்டன் தரிசனம் (1985), மாகோன் வரலாறு (1995), கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (2007) முதலியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்கள். அவற்றில் பலத்த வரவேற்பைப் பெற்ற குளக்கோட்ட...

தேனவரை நாயனாரும் தெண்டீர ஈச்சரமும்

Image
(2019 ஒக்டோபர் 18ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற இலங்கை இந்து பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. நிகழ்த்துகையின் விழிய வடிவத்தைக்  கட்டுரையின் கீழே காணலாம்.) சுருக்கங்கள்: பொ.பி - பொது ஆண்டுக்குப் பின் (கி.பி), ம.வ - மகாவம்சம் உப்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு தேவாலே, தெவிநுவர. கட்டுரைச் சுருக்கம்: தென் மாகாணத்தின் மாத்தறை நகருக்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில், தெவிநுவர நகரில் அமைந்திருக்கிறது தெவுந்தர உபுல்வன் ஸ்ரீ விஷ்ணு தேவாலயம். உபுல்வன் என்ற சிங்களப்பெயருக்கு ‘உற்பலவண்ணன்’, நீல அல்லியின் வண்ணத்தைக் கொண்டவன், என்று பொருள். சிங்கள பௌத்த மரபின் படி இலங்கைத்தீவின் நாற்பெரும் காவல் தெய்வங்களில் ஒருவன் உபுல்வன். தெவிநுவரையிலுள்ள உபுல்வன் தேவாலயத்தின் அருகே சிதைந்த கற்றூண்களையும் பண்டைய இடிபாடுகளையும் இன்றும் காணலாம். அதுவே மத்திய கால இலங்கையில் திருமாலுக்கென அமைந்து புகழ்பூத்திருந்த தேனவரை நாயனார் கோவில். அக்கோவிலுக்கு அருகே கிடைத்த தொல்பொருட்சான்றுகள் அங்கு சிவன் கோவிலொன்றும் இருந்ததைச் சொல்கின்றன. இலங்கைத் தமிழ...