Posts

Showing posts from June, 2019

இணைய அடிமையாதல்

Image
இந்தக் கட்டுரையை வாசிக்க முன், இந்தக் கட்டுரையாளனாக ஒரு சுய விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். சைவ சமயம் மற்றும் அதன் வரலாறு பற்றிக் கூறுகின்ற கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான " அலகிலா ஆடல் " எனும் நூலின் ஆசிரியன் நான். "இருந்திற்றுப் போ, எங்களுக்கென்ன" என்று நீங்கள் கேட்கலாம். ஊகூம். அதில் தான் விடயமே இருக்கிறது. பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்த ஐந்தாறு மாதங்களின் பின்னர், பகுதி நேர வேலையொன்றை வீட்டிலிருந்து செய்து கொண்டிருந்த காலத்தில் தான் அலகிலா ஆடலை எழுத ஆரம்பித்தேன்.நூற்றுக்கணக்கில் தரவிறக்கி வைத்திருந்த ஆங்கில ஆய்விதழ்களை வாசிப்பது, அவற்றை தமிழில் மொழியாக்குவது, பின்னர் தலைப்புக்கேற்ப வகைப்பிரிப்பது, இறுதியாக மொழியாக்கத்தை கொஞ்சம் மாற்றி, நூலின் ஒழுக்கு சிதையாத விதத்தில் திருத்தி எழுவது என்று அந்த நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. ஒரு விடயத்தில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால், அது நம்மை எப்படி முழுமையாக ஆட்கொண்டு விடும் என்பதை நான் உணர்ந்துகொண்ட நாட்கள் அவை. காலையில் ஏழரை, எட்டு மணியளவில் தான் எழுவேன். நான் செய்துகொண்டிருந்த பகுதிநேர வேலைக்கு ஒரு நாளில் இரண்டு...

“சேட்டைக் கழட்டுங்க முதல்!” அறியாமையின் ஆணவக்குரல்

Image
நன்றி: arayampathy.lk தலைப்பின் முதல் வரியை வாசித்து விட்டு நீங்கள் ஏடாகூடமாக ஏதும் யோசிக்கக்கூடாது என்று தான் உபதலைப்பு. அறியாமையின் ஆணவக்குரல். என்ன அறியாமை? என்ன ஆணவம்? இதுக்கும் சேட்டக்கழட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்? ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் கிழக்கிலங்கையின் தனிச்சிறப்பான கண்ணகிச் சடங்கு பருவ காலம் இனிதே நிறைவுற்றிருந்தது. அதன் பின்னணியில் ஆரையம்பதி முதல் தம்பிலுவில் வரை 15 கண்ணகி அம்மன் ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் வாய்ப்பு இந்தக் கட்டுரையாளனுக்குக் கிடைத்திருந்தது. நாட்டின் தற்போதைய சூழ்நிலைமை காரணமாக வழக்கமான கொண்டாட்ட மனநிலையை எந்த ஊரிலும் காண முடியவில்லை என்றாலும், அந்தப் பருவ காலத்துக்கே உரிய இயல்பான மலர்ச்சியை எங்குமே தவறவிட்டதாகத் தெரியவில்லை. எனினும், இந்த ஆண்டு குறிப்பாகக் கண்ட ஒரு விடயம் அதிகமாக உறுத்தியது. சுமார் ஐந்திற்கு மேற்பட்ட கண்ணகி ஆலயங்களில் "ஆண்கள் மேலாடையின்றி உட்செல்லவும்" எனும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் எத்தனை ஆலயங்களில் இந்த வழக்கம் நீண்ட நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அந்த அறிவிப்புக...

கல்லால மரத்தடி

Image
இலங்கை மண்ணில் இன்று வதியும் தமிழ் ஆளுமைகளில் மகத்தானவர்களாக நான் மதிக்கும் மூவரில் ஒருவர் பேராசிரியர்.மௌனகுரு அவர்கள். (ஏனைய இருவரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி,பத்மநாதன் மற்றும் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோர்). மட்டக்களப்பில் அலகிலா ஆடல் நூலறிமுகம் இடம்பெற்ற போது, தனக்கு பன்னிரு திருமுறைகளையும் பெற்றுத்தர முடியுமா என்று அவர் கேட்டிருந்தார். ஆறு மாதங்களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் பாரதப்பிரதமரின் உபயத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மௌனகுரு சேருக்காக நூல்களை வாங்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டது. (பொன்னம்பலவாணேச்சரம் புறப்பட்ட எங்களுக்கு பிரதமர் வருகையால் பாதை மூடியிருந்தது. பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத் திரும்பிவிட்டோம்) பன்னிரு சைவத்திருமுறைகள். வைணவ நாலாயிரத் திவ்விய பிரபந்தங்கள். மொத்தம் இருபது புத்தகங்கள். இந்த நாளில் எனக்கு மட்டக்களப்புப் பக்கம் போகும் வாய்ப்பில்லை. அப்படியே போவதென்றாலும் இத்தனை சோதனைச்சாவடிகளைக் கடந்து இவ்வளவையும் காவிக்கொண்டு எப்படிச் செல்வது? சேருக்கே அழைப்பெடுத்து விவரத்தைச் சொன்னோம். அவர் திங்கள் கொழும்பு வருவதாகச் சொன்னார...