
வீட்டில் நண்பர்களுடன் ஒரு விருந்துபசாரம். இஸ்லாமிய நண்பி ஒருத்தியும் குடும்பமாக வருகை தந்திருந்தாள். கொஞ்சநேரம் அளவளாவிய பின் உணவுக்கு ஆயத்தமானோம். எல்லோரும் மேசையில் வந்து அமர்ந்தார்கள். அவள் மட்டும் தயங்குவது தெரிந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. புன்னகையுடன் சொன்னேன். "பயப்பிடத் தேவல்ல. சாப்பிடுங்க....