Posts

Showing posts from 2020

இல்லிறப்பு: கண்ணகியும் கார்வண்ண இராமனும்

Image
  இரண்டு பதிவுகளைக் கடந்துவர முடிந்தது. ஒன்று இராவணனை தங்கள் முப்பாட்டனாகப் புகழ்ந்து இராமனை இகழும் பதிவு. அது சூர்ப்பனகை மூக்கறுப்பு, வாலிவதம், சீதையின் தீக்குளிப்பு என்று இராமனை விமர்சித்தபடி சென்றது. இன்னொன்று, சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரப்படைப்பை கேலி செய்வது. மாற்றாளிடம் சென்று திரும்பிய கணவனை கையாலாகாமல் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, வெளியூர் போய் அங்கும் பிரச்சினை ஏற்படுத்திய கண்ணகியை வெட்கமில்லாமல் கொண்டாடுகிறார்கள் என்றது அது. அதிகம் உறுத்தியது அந்தப்பதிவுகள் அல்ல. அவை இரண்டின் சாராம்சமும் என்னவென்றால், சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற வசனம். இரண்டுமே இன்றுவரை தமிழின் மிகச்சிறந்த படைப்புகளில் வைத்து எண்ணப்படுபவை. இவர்கள் சொல்வது போல, இந்த இரு நூல்களும் காலாவதியாகி விட்டனவா? இவற்றை தமிழர்கள் கொண்டாடத் தேவையில்லையா? இவற்றில் சரிபிழை கூற முன்பு, இரண்டு இலக்கியங்களும் சந்திக்கும் முக்கியமான புள்ளி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மணவாழ்க்கை. இரு துணைகளுக்கிடையிலான கலவி, திருமணம் மூலமே சமூக அங்கீகாரம் பெறுகிறது. திருமணத்...

தெய்வத்தை விழுங்குதற்கான அரக்கனின் தவம்

Image
ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 நவம்பர் 21இல் "ஈழத்தில் கண்ணகி வழிபாடு" என்ற தலைப்பில் இடம்பெற்ற சூம் கலந்துரையாடல் யூடியூப்பில் ஏற்றப்பட்டிருக்கிறது. உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. வாய்ப்பளித்த லம்போதரன் ஐயாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ( உரை- 4:45 - 47:00 தொடர்வது: கலந்துரையாடல்) அந்த உரையின் தொடர்ச்சியாக ஒரு விடயத்தைப் பதிவுசெய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். இது கிழக்கிலங்கையை மையமாக வைத்த கருத்து என்றாலும், முழு தமிழ் கூறு நல்லுலகுக்கும் பொருந்தும். தமிழகத்திலும் வட இலங்கையிலும் முழு முன்னெடுப்பில் எடுத்துச் செல்லப்படும், தனித்தமிழ் வழிபாடு என்ற கோட்பாடு கிழக்கிலங்கையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பது முக்கியமான சமூகவியல் அவதானிப்பு. காரணம் எளிமையானது தான். இங்கு தனித்தமிழில் வழிபாடு செய்வது புதுமை இல்லை. தமிழ்ப் பத்ததிகளின் வழியில், தமிழ் மந்திரங்களும் அகவல் காவியங்களும் பாடி , சடங்கு இடம்பெறும் மரபார்ந்த நாட்டார் தெய்வக் கோவில்கள் இங்கு ஏற்கனவே ஊருக்கு ஊர் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் (வட) இலங...

பின்னை எனும் நித்தியகன்னி

Image
    "கண்ணம்மா" என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? பெரும்பாலும், நீங்கள் கொஞ்சும் காதலியின் நினைப்பு வரலாம். திரை இசை இரசிகர்களுக்கு "கண்ணம்மா கண்ணம்மா அழகுப்பூஞ்சிலை"யோ, காலா "கண்ணம்மா"வோ, "கண்ணம்மா உன்ன"வோ (இஸ்பேட் ராஜா) நினைவுக்கு வரலாம். "கண்ணம்மா" என்று யூடியூப்பில் தட்டினால் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் வந்து விழுகின்றன. இன்னும் சிலருக்கு விஜய் டிவியில் ஓரிரு வாரங்களுக்கு முன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடையாய் நடந்து சிரிக்க வைத்த பாரதி கண்ணம்மா நினைவுக்கு வரலாம். எத்தனை கண்ணம்மாக்களும் வரட்டும். ஒரிஜினலுக்கு ஈடாகுமா எந்த டூப்ளிகெட்டும்? கண்ணம்மாவைப் படைத்த பாரதியின் பாடல்கள் தரும் கிறக்கத்துக்கு முன் இது எதுவுமே அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றே சொல்லவேண்டும். "நின்னையே இரதி என்று" எனக்கு மிகப்பிடித்த கண்ணம்மாப் பாடல்களில் ஒன்று. "Kannamma - Eternal Love" என்ற சைந்தவி பாடிய இசைத்தொகுதியில் தான் அதை முதன்முதலில் கேட்டேன். 1986இல் வெளியான "கண்ணே கனியமுதே" என்ற திரைப்படத்தில...

கார்த்திகைத் திருநாள்

Image
  "அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி" பாடலில் ஒரு வரி வரும். “கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே”. போதாக்குறைக்கு "வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்" பாட்டிலும் அதே வரி வருகிறது. "கார்த்திகை போனால் மழை இல்லை மானே". அது உண்மையா? கார்த்திகை பிறந்தால் தானே இப்போதெல்லாம் மழையே வலுக்கிறது? வேறு காரணமொன்றும் இப்போதைக்கு சொல்ல முடியாது. காலநிலை மாற்றம் அவ்வளவு தான். ஆனால் "கார்த்திகை போனால் கடும் மழை இல்லை" என்ற பழமொழிக்கு ஈராயிரம் ஆண்டு அனுபவமும் வானியல் அறிவும் இருக்கிறது. அதற்கு ஆதாரம் சங்க இலக்கியமான அகநானூறு. அதன் 141ஆம் பாடல் அப்படித் தான் சொல்கிறது. கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி அண்ணாந்து பார்க்கிறாள். “வானத்தில் மழையைக் காணவில்லை. முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய, பூரண நிலவு கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிறது. எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள். என்னோடு இந்தப் பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே” என்று பெருமூச்செறிகிறாள். “வானில் மழை வரும் அறிகுறி இல்லை” என்று தலைவி சொல்வது, "...

விருந்து

Image
போனவாரம் தான் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாயின. அந்தப் பரீட்சையை நான் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அந்தப் பரீட்சையில் மறக்கமுடியாத ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐந்து வசனம் எழுதுமாறு கோரி, வினாத்தாளில் வந்த கேள்வி "எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தபோது..." என்று ஆரம்பித்திருந்தது. நான் இப்படி எழுதினேன். 1. எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் மாலை நேரத்தில் வந்தார். 2. அவர் என் பெற்றோரைப் பார்த்து "பசி பசி" என்று அழுதார். 3. அம்மா வீட்டில் இருந்த கொஞ்ச மாவைப் பயன்படுத்தி உரொட்டி தயாரித்தார். 4. நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உரொட்டி சாப்பிட்டோம். 5. விருந்தினர் எங்களுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். வினாத்தாள் அத்தனை கடினமாக இருக்கவில்லை. பரீட்சை எழுதி முடித்ததும் பாடசாலை அதிபர் ஓடோடி வந்தார். அந்தப் பாடசாலையிலேயே அதிகம் பேர் சித்தியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி எங்களுடையது. "வசனம் எழுதுற கேள்வி என்ன தலையங்கம் வந்தது? என்ன எழுதினேல்?" என்று அதிபர் பதகளிப்புடன் கேட்டார். கூடியிருந்த என் நண்பர...

மாவடி வைகும் செவ்வேள்

Image
  மிளகாய்த்தூளோடு அல்லது உப்புத்தூளோடு பச்சை மாங்காய் சாப்பிட்ட பால்ய கால அனுபவம் நம் எல்லோருக்குமே இருக்கும். மாங்காய் தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம். Mangifera Indica என்பது தாவரவியற் பெயர். மேங்கோ என்ற ஆங்கிலச்சொல் மாங்காய் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. ஆனால் ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியில் பார்த்தால், அது மலையாளச் சொல்லிலிருந்து வந்தது என்று போட்டிருக்கும். மலையாளத்திலும் மாங்காய் "மாங்ஙா" தான். ஆரம்பகால காலனித்துவக் குறிப்புகளின் படி மாங்காய் என்பது மலபார் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்த சொல். அப்போது மலபார் என்பது மலையாளிகளை மாத்திரமன்றி தமிழர்களையும் குறித்தது. இலங்கை பற்றிய பழைய ஐரோப்பியக் குறிப்புகளில் சிங்களீஸ் மற்றும் மலபார் என்று இரண்டு மொழி இங்கு பேசப்படுவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்குத் தனித்துவமான தேசவழமைச் சட்டம், மலபார்களுக்கான சட்டமாகவே இன்றுவரை உத்தியோகபூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன் பொருள் இலங்கையில் இருந்தவர்களும் இருப்பவர்களும் மலையாளிகள் என்பதல்ல; காலனித்துவ காலத்தில் மலபார் என்பது தமிழரையும், அ...