Posts

Showing posts from 2022

ஐரோப்பிய கால ஆவணங்களில் போரதீவுப்பற்று

Image
இன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றான போரதீவுப்பற்று, அம்மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்பிரதேசமாகும். வடக்கே அத்தியாமுன்மாரி ஆற்றுக்கும் கிழக்கே பழுகாமத்து ஆறு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு வாவிக்கும் தெற்கே குரங்குத்தீவு ஆற்றுக்கும் மேற்கே இராசக்கல் மலை மற்றும் புளுகுணாவை ஏரி என்பவற்றுக்கும் இடைப்பட்டதாக சுமார் 180 சதுரகிமீ பரப்பில்   விரிந்து விளங்குகின்றது. வரைபடம் 01. 1695இல் வரையப்பட்ட பழைய இடச்சு வரைபடம். இதில் போரதீவு கிராமம் (Farredive) காட்டப்பட்டுள்ளது. மூங்கிலாறு எருவிற்பற்று (?) ஆறு (Riv van E.patto) என்று காட்டப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடியிருப்பு (Kalloewanje koederipoe), கோட்டைக்கல்லாறு (Chinnacalette சின்னக்கல்லாறு), நீலாவணை (Melewanone) ஊர்களும் தென்படுகின்றன.

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 02

Image
 முந்தைய பாகம்: ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01 6.2  பொபி 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷண்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religionகளை அவர் ஒன்றாக்கவில்லை. ஆறு தரப்புகளை ஒன்றாக்கினார். அதாவது ஆறு வழிபாட்டுமுறைகளை இணைத்தார்.  

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01

Image
 (எழுத்தாளர் ஜெயமோகனின் "இந்துமதம் என ஒன்று உண்டா" தொடருக்கான மறுப்பு) இந்துமதம் என ஒன்று உண்டா (1) இந்துமதம் என ஒன்று உண்டா (2) இந்துமதம் என ஒன்று உண்டா (3) அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். தங்கள் நலம் விழைகிறேன். ' வாசிக்கும் நண்பர்களுடன் ஏதாவது உரையாடும் போது உங்கள் பெயர் வந்துவிடும். உரையாடும் எல்லோருமே எங்கோ ஓரிடத்தில் உங்களோடு முரண்படுபவர்கள். ஆனால் தமிழ் இலக்கிய உலகிலும் சமகால  அறிவியக்கத்திலும் உங்கள் தவிர்க்கவியலாமையை ஏற்றுக்கொண்டவர்கள்.  ஓராண்டுக் கு முன் தங்கள் வாசகர்களுள் ஒருவனான நீதுஜன் பாலாவின் அழைப்பின் பேரில் “திகட சக்ர” அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெண்முரசு பற்றிய விவாதமொன்றில் நடுவராகப் பணியாற்றியிருந்தேன். அந்தப் பின்னணியில் பலநாளாகவே எழுதி வெளியிடாது வைத்திருந்த என் வெண்முரசு அனுபவத்தை அண்மையில் தான் முழுமைப்படுத்தி என் வலைப்பதிவில்  வெளியிட்டுள்ளேன் .   இலக்கிய உலகில் ஓய்வின்றி தாங்கள் படைத்துக்கொண்டிருக்கும் சாதனைகளுக்குப் பாராட்டு.   உங்கள் “ நான் இந்துவா ” கட்டுரை தான் எனக்கு உங்கள் வலைத்தளத்தை அறிமுகஞ்செய்து வ...

அனுராதபுரத்துக் கண்ணகி படிமங்கள்

Image
இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே.  அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின் அடையாளப்படுத்தலின் படி இவை இரண்டும் சைவ இறைமூர்த்தமான மாதொருபாகன் (அர்த்தநாரீசுவரர்) வடிவங்கள். ஆனால், இவை இரண்டின் உடலமைப்பும் ஆண் பாதி பெண் பாதி என்று இனங்காணமுடியாதவாறு  பெண்ணுடலின் அங்க இலக்கணங்களுடனேயே வடிக்கப்பட்டுள்ளன. 

வெண்முரசு - ஓர் அறிமுகம்

Image
கடந்த ஓகஸ்ட் மாதம் எனக்கு விவாதமொன்றின் நடுவராகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தது.   அழைத்தவன் நண்பன் நீதுஜன் பாலா. "திகட சக்ர  அமைப்பினர் வெண்முரசு பற்றி விவாதமொன்று செய்கிறார்கள். நடுவராகப் பணியாற்றுகிறாயா?" என்று கேட்டான்.   'திகட சக்ர' அமைப்பு பற்றி எனக்கு முன்பே தெரியும். முகநூலைக் களமாகக் கொண்டு தமிழ் இளைஞர்களிடையே  விவாதத்திறனை வளர்க்கும் அமைப்பு அது. அவர்களின் ஓரிரு விவாதங்களை நேரலையாகப் பார்த்திருக்கிறேன். இலங்கைத் தமிழ் இளந்தலைமுறையினர் மத்தியில் பேச்சாற்றல் குறைந்துவரும் சூழலில் அவர்கள் செய்துகொண்டிருப்பது அருமையான பணி. ஆனால் விவாதத்துக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம். எழுத்து அளவுக்கு நான் பேச்சில் அத்தனை தேர்ந்தவன் அல்ல. விவாதப்போட்டியில் நடுவர் வேறா என்று திகைத்துப்போனேன். உமிழ்நீரை விழுங்கிக்கொண்டு "முடியாது" என்ற சொல்லை உச்சரிக்க முன்னே, ஒரு சொல் சிந்திக்க வைத்தது. வெண்முரசு!  அதையே நீதுஜனும் சொன்னான் "இது உனக்கு ஒரு வாய்ப்பு. வெண்முரசை முழுமையாக வாசித்தவர்கள் மிகக்குறைவே. திகட சக்ரவில் பங்குபற்றுவோர், பார்வையாளர்கள் அத்தனை பேரும் தமிழார...

கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று

Image
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் , திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு , இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .   இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் ப . புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா . இந்திரபாலா (2021:8,18) ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான – அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர் . இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை,   அவர்களால்   கலிங்க மாகோனாக அடையாளம்   காண   முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது . கலிங்க மாகோனை    பாலி  -  சிங்கள   நூல்கள்   கொடுங்கோலனாகவும் ,  இலங்கைத்   தமிழ்   நூல்கள்   சரித்திர   நாயகனாகவும்   சித்தரிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.    கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு :   [ சிதைந்த வடமொழி சுலோகம் ]   ஸ்வஸ்திஸ்ரீ …… .[ த்திகள் ?] [ ஸ்...