
"அயிகிரி நந்தினி" என்று துவங்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை நீங்கள் ஒருமுறையாவது கேட்டிருப்பீர்கள். பொருள்புரியாது கேட்டாலே சந்த அழகாலும் இனிமையாலும் மயக்கும் வடமொழித் துதி அது. ஆதிசங்கரர் இயற்றியது என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் கிடைக்கின்ற மரபுரைகளின் படி அதை இயற்றியவர், இராமகிருஷ்ணகவி. அந்தப்பெயரில்...